Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்..சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது சாலை மறியலில் ஈடுப்பட்டதாக போடப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் புழல் சிறையில் தொடர்ந்து இருக்கும் நிலை உள்ளது

Bail for former minister Jayakumar
Author
Tamilnádu, First Published Feb 24, 2022, 4:03 PM IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது சாலை மறியலில் ஈடுப்பட்டதாக போடப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் புழல் சிறையில் தொடர்ந்து இருக்கும் நிலை உள்ளது

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். நரேஷின் சட்டையை கழற்றி, அரைநிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச்சென்று தாக்கினர்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவிய நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. வன்முறையை தூண்டும் வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருப்பதால் கொலை முயற்சி பிரிவும், தகவல் தொழில்நுட்ப பிரிவும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதனை சென்னை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் போடப்பட்ட இரண்டாவது வழக்கில் ஜாமின் வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கில் மார்ச் 9 ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தண்டையார்பேட்டையில் திமுக நிர்வாகியை தாக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று ராயபுரம் பகுதியில் அதிமுக தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதுதொடர்பாக ராயபுரம் போலீசார் போட்ட வழக்கில் ஜாமீன் கோரி இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.ஆனால் திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் ஜாமீன் வழங்கப்படாததால் அவர் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios