தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் திமுக காரங்க ரொம்ப ரோஷமானவங்க, இதே வேலய பன்வாரிலால் பன்னும் போது கொதிச்சா மாதிரி கொதிப்பாங்களேன்னு நெனச்சாதான் பயமா இருக்கு என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் விமர்சித்துள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் திமுக காரங்க ரொம்ப ரோஷமானவங்க, இதே வேலய பன்வாரிலால் பன்னும் போது கொதிச்சா மாதிரி கொதிப்பாங்களேன்னு நெனச்சாதான் பயமா இருக்கு என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற வந்த போது, அப்போதைய எதிர்கட்சியான திமுக, அதிமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் அதிமுக மாநில உரிமைகளை பாஜகவிடம் தாரை வார்ப்பதாகவும் குற்றம்சாட்டியது. அப்போது தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தமிழகம் முழுவது ஆய்வு செய்து வந்தார். அவரது வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவையில் ஆய்வு பணியில் ஈடுபட்ட அவர் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அத்துடன் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆனால் அவரது வருகைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் மாநில உரிமைகளை பாஜக அரசிடம் தாரை வார்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. மே 2 ஆம் ஞாயிறுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கான பல திட்டங்களையும் அவர் செய்லபடுத்தி வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய போது பாதிப்புக்குள்ளான இடங்களை நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கினார். மேலும் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தென் மாவட்டங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவரின் இந்த திடீர் சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் ஆளுநர் ஆர். என் ரவி பார்வையிட உள்ளார். அதிமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், இப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு என்ன செய்ய போகிறார்கள் என அதிமுக வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், டிவிட்டரில் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதுக்குறித்த அவரது பதிவில், திமுக காரங்க ரொம்ப ரோஷமானவங்க, இதே வேலய பன்வாரிலால் பன்னும் போது கொதிச்சா மாதிரி கொதிப்பாங்களேன்னு நெனச்சாதான் பயமா இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தமிழ்நாடு ஆளுநராக பதவி ஏற்றபின் ஆளுநர் ஆர்.என் ரவி பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். பதவி ஏற்று சில வாரங்களிலேயே இவர் டெல்லி பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் முதல்வர் ஸ்டாலினுடன் இரண்டு முறை சந்திப்பு நடத்தினார். அதோடு சென்னை வெள்ளத்தின் போது போன் மூலம் முதல்வரிடம் ஆளுநர் உரையாடினார். டெல்லியில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்தித்தார். இதில் அரசியல் குறித்தும், தமிழ்நாடு எல்லை பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இன்றில் இருந்து ஆளுநர் ஆர். என் ரவி தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவரின் இந்த திடீர் சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்கிறார். 4 நாட்களுக்கு இந்த பயணத்தை ஆளுநர் மேற்கொள்ள இருக்கிறார்.