நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. உத்தபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு  தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமமான பிரிவாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.

மதங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிக்கிறது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. அமைதியை காக்கவும், பாதுகாப்பை நிலைநாட்டுவதும் முக்கியம்  மத நம்பிக்கை என்பது ஓவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புகிறார்கள். ஆவணங்களின் படி இந்த சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது

நிலம் தொடர்பான மத்திய தொல்லியல் துறையின் கருத்தைநிராகரிக்க முடியாது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் இஸ்லாமிய கட்டடக் கலையை போன்றது அல்ல.  பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த கட்டடம் இருந்துள்ளது. அதே இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.  ஷன்னி பிரிவுக்கு  எதிராக ஷியா வாரியம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’’ என ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கி வருகிறார்.