உச்சநீதிமன்றத்தை தாக்கும் முஸ்லிம் தனிநபர் வாரியம். பகவான் இராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் இராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை வழங்கியதற்காக முஸ்லிம் தனிநபர் வாரியம் "ராமர் கோவில் கட்ட அனுமதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது மற்றும் அநியாயமானது" என்று குற்றம்சாட்டியது. 

துருக்கியில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்ட மசூதி 'ஹாகியா சோபியா.' இது துருக்கியில் இஸ்தான்புல்லில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான கிறிஸ்துவ தேவாலயம் ஆகும். இது சமீபத்தில் மசூதியாக மாற்றப்பட்டது. 'ஹாகியா சோபியா' உடன் பாபர் மசூதியை ஒப்பிட்டு, முஸ்லிம் தனிநபர் வாரியம் பாபர் மசூதி என்றுமே மசூதி தான் என ஒப்பிட்டது. கி. பி 537 இல் பைசண்டைன், பேரரசர் ஐஸ்டின் அவர்களால் கட்டப்பட்ட தேவாலயம் 'ஹாகியா சோபியா' உலகின் மிகப்பெரிய தேவாலயம் என்று நம்பப்பட்டது. 1453-இல் ஓட்டோமான் ஆட்சியில் தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

உச்சநீதிமன்றத்தை தாக்கும் முஸ்லிம் தனிநபர் வாரியம். பகவான் இராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் இராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை வழங்கியதற்காக முஸ்லிம் தனிநபர் வாரியம் "ராமர் கோவில் கட்ட அனுமதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது மற்றும் அநியாயமானது" என்று குற்றம்சாட்டியது. 

வாரிய பொதுச்செயலாளர் முகம்மது வாலி ராஹ்மானி பேசும் போது...  "எந்த ஒரு கோவில் மற்றும் இந்து வழிபாட்டு தலத்தை இடிப்பதன் மூலம் பாபர் மசூதி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதுவே எங்கள் நிலைப்பாடு" பாபர்மசூதி பற்றிய அகழ்வாராய்ச்சியில் மசூதி தளத்திற்கு கீழே உள்ள தளத்தின் பகுதிகள் 12ம் நூற்றாண்டை சேர்ந்தவை அதாவது பாபர் மசூதி கட்டுவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என நிரூபணமாகியுள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முஸ்லிம் தனிநபர் வாரியம் "நீதியை அவமானப்படுத்தியுள்ளது. "இஸ்லாமிய ஷரியாவின் கூற்றுப்படி எந்த இடத்தில் ஒரு மசூதி நிறுவ பட்டாலும் அது முடிவில்லாமல் கடைசிவரை மசூதியாக அங்கேயே இருக்கும். எனவே பாபர் மசூதி முன்பு மசூதி தான், இன்றும் மசூதிதான் முடிவில்லாமல் அல்லா மசூதியில் இருப்பார்" எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இந்துக்களின் கோரிக்கையே ஏற்று பகவான் இராமர் கோயிலை கட்டியெழுப்பவும் நூற்றாண்டு காலமாக ஏற்பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் அயோத்தியில் இருக்கும் இராமரின் புனித ஜென்ம பூமியை உச்சநீதிமன்றம் இந்துக்களிடம் ஒப்படைத்தது.தீர்ப்பின் படி  
இராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.அயோத்தி நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது.ராமர் கோயில் கட்டுமான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற இருக்கிறது.இந்த நேரத்தில் இதுபோன்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.