தமிழகத்தில் பிஜேபி சார்பில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், நாயினார் நாகேந்திரன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் படு தோல்வியை சந்தித்துள்ளதும், கேரளாவில் மொத்தமாக வாஷ் அவுட் ஆனதும் பிஜேபியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

17-வது லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பிடித்திருக்கிறது பா.ஜ.க. பா கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் 543 தொகுதிகளில் 345 தொகுதிகளை அள்ளி மாஸ் எண்டரியை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. இந்த பெரும்பான்மையை பா.ஜ.க தலைவர்கள் அக்கட்சியின் தொண்டர்களுடன் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 

இக்கொண்டாட்டம்  ஒரு புறம் இருந்தாலும் தென் மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு இடம் கூட பிடிக்கக்கூட முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் 5- இடங்களில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், நாயினார் நாகேந்திரன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் படு தோல்வியை சந்தித்துள்ளது.  

இதே நிலைமைதான் கேரளாவிலும் அங்கு போட்டியிட்ட பா.ஜ.க ஒரு இடங்களில் கூட வெற்றியை பெற முடியாமல் தோல்வியை தழுவியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் தென்மாநிலங்களில் மோடிக்கு எதிரான அலை விசுகிறது என்கின்றனர் பி.ஜே.பியின் எதிர்ப்பாளர்கள்.