Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு எதிராக போராடியதை கெடுத்ததே கனிமொழியும் மு.க.ஸ்டாலினும்தான்... அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு..!

மோடிக்கெதிரான எங்களது போராட்டத்தை கெடுத்ததே கனிமொழியும், மு.க.ஸ்டாலினும்தான் என விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 

ayyakkannu says about amitshah and m.k.stalin
Author
Tamil Nadu, First Published Apr 17, 2019, 2:24 PM IST

மோடிக்கு எதிரான எங்களது போராட்டத்தை கெடுத்ததே கனிமொழியும், மு.க.ஸ்டாலினும்தான் என விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

 ayyakkannu says about amitshah and m.k.stalin

டெல்லியில் விவசாயிகளை திரட்டி எலிக்கறி தின்று, அம்மணமாய் நின்று அய்யாக்கண்ணு கோஷ்டி நடத்திய போராட்டங்கள் சர்வதேச தளத்தில் மோடியின் பெயரை டேமேஜ் செய்தன. விளைவு ஏற்கனவே மோடி மனதில் எரிந்து கொண்டிருந்த தமிழக வெறுப்பு நெருப்பாய் பற்றியது. அப்பேர்ப்பட்ட அய்யாக்கண்ணு, தேர்தல் நேரமான தற்போது மோடி மற்றும் பி.ஜே.பி.க்கு எதிராக விஸ்வரூபமெடுத்து, விவசாயிகளின் வாக்கு வங்கியை மிக முழுமையாக அக்கூட்டணிக்கு எதிராக திருப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 7-ம் தேதியன்று டெல்லிக்கு பறந்து, அமித்ஷாவை சந்தித்து ‘விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி மொத்தமாக சரண்டராகி விட்டார் எனக் கூறப்பட்டது.

 ayyakkannu says about amitshah and m.k.stalin

தேர்தலில் மோடிக்கு எதிராக போட்டியிட போவதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்த நிலையில் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியபின் தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு விட்டாரே என சந்தேகம் எழுந்தது. அடுத்து ’டெல்லியில் அன்றைக்கு போராட்டம் நடத்த என்னை தூண்டியதே திமுகவும் காங்கிரசும்தான்’’ என அவர் சொல்லி நெருப்பு மீது பெட்ரோலை ஊற்றியது போலாகி விட்டது.   

இதனால் "அமித்ஷாவிடம் அய்யாக்கண்ணு விலைபோய்விட்டார், பெட்டி நிறைய பணம் வாங்கி விட்டார்" என மக்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனை எதிர்பார்க்காத அய்யாக்கண்ணு, தன் மீது கேலி, கிண்டல் செய்து அவதூறு பரப்புவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் புகார் அளித்தார்.ayyakkannu says about amitshah and m.k.stalin

அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெல்லியில் போராட்டம் நடத்தியபோது ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ்காரர்கள் யாரும் எங்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை. போராட போ... என டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆனால், ஏன் இப்படி வெயிலில் கிடந்து போராட்டம் நடத்தறீங்க..? வாங்க ஊருக்கு போலாம்னு எங்களை கிளப்பியதே கனிமொழிதான். ஆனால் இப்போது இப்படி ஒரு தவறான தகவல் என்னை பத்தி பரவுது. இதை பற்றி கொடுத்திருக்கிறேன்.ayyakkannu says about amitshah and m.k.stalin

இப்படி வதந்திகளை யார் சமூகவலைதளங்களில் பரப்பிகிறார்களோ அவர்கள் மீதும் மானநஷ்ட வழக்கு போட நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சொல்லி உள்ளார். பி.ஆர்.பாண்டியன் எங்களை பற்றி அவதூறாக சொல்லி இருக்கிறார். அவர்மீது தனியாக ஒரு நஷ்டஈடு வழக்கு போட போறோம். நாங்க விவசாயிங்க. எந்த கட்சியும் எங்களுக்கு இல்லை. விரும்பியவர்களுக்கு ஓட்டு போடலாம்னு நாங்க ஒரு தீர்மானமே போட்டிருக்கோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios