Asianet News TamilAsianet News Tamil

திமுக - காங்கிரஸை பற்றி நான் அப்படிச் சொல்லவே இல்ல... உண்மையை உடைத்த அய்யாக்கண்ணு..!

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்றது. தங்களைப் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிதான் என்று அய்யாக்கண்ணு கூறியதாக வெளியான பதிவு பொய்யானது, விஷமத்தனமாக சித்தரிக்கப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. 

ayyakannu refuse  talk about DMK
Author
Delhi, First Published May 20, 2019, 11:19 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்றது. தங்களைப் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிதான் என்று அய்யாக்கண்ணு கூறியதாக வெளியான பதிவு பொய்யானது, விஷமத்தனமாக சித்தரிக்கப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. 

பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகளை தூண்டிவிட்டு, டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், இந்தப் போராட்டத்தை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுக தான் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்த கருத்து உண்மையில்லை எனது தெரிகிறது.

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, ’’தி.மு.க, காங்கிரஸ் கட்சி எங்களை இயக்கியதாக நான் கூறியது போன்று பரவும் செய்தி தவறானது. டெல்லியில் நாங்கள் போராடும்போது ஆடி கார் அய்யாக்கண்ணு, 250 ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி கடன் இருக்கிறது அதனால்தான் போராடுகிறார் என்றார்கள்.

எனது பெயரில் ஆடி கார் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். என் பெயரில் 30 ஏக்கர் உள்ளது. 250 ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால், பத்திரம் எழுதி கொண்டு வாருங்கள் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிடுகிறேன், சொசைட்டியில் 97 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடிகளில் கூட வேண்டாம், ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்கிறது என்று நிரூபித்தால் கூட தூக்குப்போட்டு தொங்குகிறேன் என்றேன். அதன் பிறகு ஒருவரும் பேசவில்லை.

இப்போது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என் படத்தைப் போட்டு, என்னைத் தூண்டி விட்டதாக செய்திகள் பரப்புகிறார்கள். பல முறை கூறிவிட்டேன். டெல்லிக்கு நாங்கள் சென்று போராடிய போது பிச்சை எடுத்துத்தான் சோறு சாப்பிட்டோம். ஸ்டாலின் அய்யாவோ, கனிமொழியோ, காங்கிரஸ்காரர்களோ ஒரு பைசா கூட எங்களுக்குத் தரவில்லை. இப்படி இருக்கும்போது அவர்கள் தூண்டிவிட்டார்கள் என்று அபாண்டமான பொய்யை சொல்கிறார்கள். எப்படித்தான் இப்படிச் சொல்கிறார்களோ தெரியவில்லை.

இப்போது கூட அமித்ஷாவை நானாக சென்று பார்க்கவில்லை. 2019 மார்ச் 13ம் தேதி எங்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்களை நிறைவேற்றினோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்தியில் ஆட்சிக்கு வரக் கூடிய இரண்டே இரண்டு கட்சிகளால்தான் முடியும். நீங்கள் இரண்டு பேரும் எங்களை அழைத்துப் பேசி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று தீர்மான நகலை அனுப்பினோம்.

காங்கிரஸ் தரப்பில் எங்களைத் தொடர்பு கொண்டவர்கள் தகுந்த ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். பா.ஜ.க-வில் இருந்து சந்திக்க எங்களை நேரில் அழைத்தனர். அப்போதும் கூட தனி ஆளாக வர முடியாது. நீங்கள் வேண்டுமானால் அழைத்துச் செல்லுங்கள் என்றோம். நிர்வாகிகள் எங்கள் 9 பேரை அழைத்து சென்று அமித்ஷாவை சந்திக்க வைத்தனர். அப்போது கூட, நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம். அழைத்து சந்தித்ததில் மன நிறைவு, அதனால் வாரணாசியில் போட்டியிடுவதை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம், என்றோம்.

ஏப்ரல் 8ம் தேதி டெல்லியில் சந்தித்தோம், 10ம் தேதி திருச்சியில் மீண்டும் சங்க செயற்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். அதில் முக்கியமானது எந்த கட்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். விவசாயிகள் தங்கள் விருப்பம்போல எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டுக்கொள்ளலாம் என்றோம். இப்படி இருக்கும்போது எப்படித்தான் தவறான செய்தியை பரப்புகிறார்களோ?

இந்த வதந்தி தொடர்பாக தமிழக டி.ஜி.பி-ஐ சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன். எங்களை தி.மு.க-வினர் மிரட்டிவருவதாகவும் வதந்தி பரவுகிறது. ஒருவர் கூட தி.மு.க-வில் இருந்து எங்களை மிரட்டவில்லை’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios