கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலைவழக்கு விவகாரம் சட்டப்பேரவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலைவழக்கு விவகாரம் சட்டப்பேரவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இந்த விவகாரத்தில் சிக்க வைக்கும் முயற்சியாக சயான், மனோஜ், பிரதீப் ஆகியோர் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் பல எஊறு ஏக்கர் நிலத்தில் எஸ்டேட் வாங்கிப்போட்டு இருந்தார். அவர் உயிருடன் இருந்த அவரை யாரும் உள்ளே நுழையமுடியாத கோட்டையாக இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு 2017 ஏப்ரல் 24ம் தேதி காவலாளி ஓம் பகதுார் கொல்லப்பட்டு, கொள்ளை நடந்தது. இந்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ் உள்ளிட்டோர் கைதாகி, ஜாமினில் வெளியே உள்ளனர். இவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, சட்டசபையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார். 

Scroll to load tweet…

சட்டசபை முன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். தற்போது, கொடநாடு காவலாளி கொலை வழக்கில், எடப்படி பழனிசாமியை சிக்க வைக்க, சயான், மனோஜ் மற்றும் பத்திரிகையாளர் பிரதீப் ஆகியோர் நடத்திய உரையாடல் வீடியோ, சமூக வலைதளமான 'டுவிட்டர்' பக்கத்தில் அ.தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.