Asianet News TamilAsianet News Tamil

பாஜக - அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி... அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!

பாஜக - அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சட்டத்திற்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

Attempt to create confusion within BJP-AIADMK alliance ... Annamalai charge ..!
Author
Chennai, First Published Dec 23, 2020, 10:23 PM IST

'தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.200மாக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5 ஆண்டுகளை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது.’ என்று பாஜக  துணை தலைவர் அண்ணாமலை பேசியது, அதிமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசை வைத்துதான் என்று சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக அண்ணாமலை விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலை மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.Attempt to create confusion within BJP-AIADMK alliance ... Annamalai charge ..!
அதில், “கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் ஒரு கட்சியை சார்ந்த ஊடகங்கள் நான் பேசிய அனைத்து விஷயங்களையும் திரித்து சமூக தளத்தில் நமது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சட்டத்திற்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை ஜனநாயகத்தில் ஊடகத்தின் முக்கியமான வேலை என்று ஒன்று இருக்கிறது. அது மக்களுக்கு உண்மையை உள்ளவாறு எடுத்துரைத்து சரியான நேரத்தில் அதை கொண்டு சேர்ப்பது.
தமிழக ஊடகங்கள் இதுவரை அதை சரியாக செய்து வந்தன. இப்பொழுதுதான் அவர்களில் சிலர் சில காலமாக இப்படி தர்மத்திற்கு எதிராக வேலை செய்து வருகிறார்கள். அதனால் நாளை முதல் நான் கலந்து கொள்ளும் அனைத்து ஊடக நிகழ்ச்சிகளும் என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பில் வரும். நம்முடைய நண்பர்களும் உண்மையை மட்டுமே விரும்பும் தமிழர்கள் அனைவரும் பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் நான் தரும் பேட்டிகளை என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொள்ளலாம்.

Attempt to create confusion within BJP-AIADMK alliance ... Annamalai charge ..!
சீப்பை ஒளித்து விட்டு கல்யாணத்தை நிறுத்த கயவர்கள் சிலர் முயற்சிப்பதை போல வார்த்தைகளை திரித்து கூட்டணி குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். சத்தியம் வெல்லும்” என அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios