Asianet News TamilAsianet News Tamil

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. அடுத்த 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை.

தமிழக கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் (1.5 முதல் 3.6 கிலோமீட்டர் உயரம்வரை)  வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் கர்நாடகாவிலிருந்து தென் கேரளம் வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை)  வளிமண்டல சுழற்சி காரணமாகவும், 28.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.  

Atmospheric circulation in the Bay of Bengal .. Rain for the next 4 days in the districts along the Western Ghats.
Author
Chennai, First Published Apr 28, 2021, 4:01 PM IST

தமிழக கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் (1.5 முதல் 3.6 கிலோமீட்டர் உயரம்வரை)  வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் கர்நாடகாவிலிருந்து தென் கேரளம் வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை)  வளிமண்டல சுழற்சி காரணமாகவும், 28.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Atmospheric circulation in the Bay of Bengal .. Rain for the next 4 days in the districts along the Western Ghats.

29.04.2021 முதல் 02.05.2021 வரை : மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.வெப்பநிலை முன்னறிவிப்பு : தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை  வெக்கையாகவும், இயல்புக்குமாறாக அதிகமாகவும் வியர்க்கும். 

Atmospheric circulation in the Bay of Bengal .. Rain for the next 4 days in the districts along the Western Ghats.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன்  காரணமாக மாலை முதல் காலை வரை  வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு ஆண்டிபட்டி (மதுரை), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 2 சென்டிமீட்டர் மழையும், கள்ளிக்குடி (மதுரை), கோவில்பட்டி (தூத்துக்குடி), ஆலங்குடி  (புதுக்கோட்டை), வேதாரண்யம்  (நாகப்பட்டினம்), அணைப்பாளயம்  (கரூர்) தலா 1 சென்டிமீட்டர் மழை பாதிவாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios