ஏடிஎம்களில் இதுவரை ரூ.2500 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜன.1 முதல் ரூ.4500 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். வங்கிகளில் பழைநோட்டுகளை முதலீடு செய்ய டிச. 30 வரை கெடு விதிக்கப்பட்டது. மேலும் தங்களிடமுள்ள பணத்தை முதலீடு செய்தவர்கள் தினம் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும் என கெடு விதிக்கப்பட்டது. 

ஏடிஎம்களில் பணம் எடுப்பது முதலில் 2000 என்றும் பின்னர் 2500 என்றும் உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகளில் ஏடிஎம்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இதனிடையே 500 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி இதுவரை வெளியிடாததால் பெரிய அளவில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டு அனைத்து தொழிகளும் முடங்கியது. 

ஏடிஎம்களில் 100 ரூபாய் தாள்களே இல்லாததால் வெறும் ரூ.2000 மட்டுமே எடுக்க முடிந்தது. அதுவும் தற்போது அறுகி போய் 60 சதவிகிதத்திற்கு மேலான ஏடிஎம்களில் பணம் இல்லை , வேலைசெய்யாத ஏடிஎம்கள் காரணமாக பொதுமக்கள் பணம் எடுக்க முடியாத நிலை.

மறுபுறம் வாரத்துக்கு ஒரே முறையில் ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என்று போனால் பணம் இல்லை ரூ.5000 மட்டும் எடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறுவதால் தங்களது தேவைக்கான பணத்தை கூட எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏடிஎம்களில் எடுக்கும் தொகையின் உச்சவரம்பை 2500 ரூபாயிலிருந்து 4500 ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் ஜன.1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

ஏடிஎம்களே வேலை செய்யவில்லை என்ன செய்வது என்கிறீர்களா? அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எல்லையில் வாடும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைத்து தியாக வாழ்வு வாழ வேண்டியது தான் என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர் வேதனை கலந்த கிண்டலுடன்.