Asianet News TamilAsianet News Tamil

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை கோயில்களில் பணி நியமனம் செய்யுங்கள்.. ஸ்டாலினுக்கு வந்த அதிரடி கோரிக்கை.

அதிமுக அரசு கடந்த பத்து ஆண்டுகளாக  தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. இந்த ஆட்சிகாலம் முழுக்க  குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோயில்களில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அனைத்து சாதி இந்துக்களுக்கானது என்ற கலைஞரின் திட்டத்தை ஒரு சாதிக்கானதாக மாற்றினார்கள்.  

Assign students who have completed priestly training to work in temples .. Action demand for Stalin.
Author
Chennai, First Published May 6, 2021, 9:50 AM IST

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக நல்லாட்சி நடைபெற மனதார வாழ்த்துகிறோம். கோயில் கருவறையில் உள்ள தீண்டாமை ஒழிப்புக்காக காத்திருக்கிறோம். சமூகநிதி, சமத்துவம் என்ற தந்தை பெரியாரின் கொள்கைகளை முன்வைத்த திமுக கூட்டணியை தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். பார்ப்பனீயம், மதவாதம், சாதிய கருத்துக்களை புறந்தள்ளியுள்ளனர். எனவே தமிழக மக்களின் தேர்வின் நோக்கமாக சமத்துவ சமூகத்தை நோக்கி திமுக அரசு நிச்சயம் செல்லும் என நம்புகிறோம். ஆனால் சமத்துவ சமூகத்திற்கு எதிராக, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை உள்ளது. கருவறைத் தீண்டாமையை ஒழிக்க கலைஞர் அவர்கள் தொடங்கிய பணியை தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். 

Assign students who have completed priestly training to work in temples .. Action demand for Stalin.

அதிமுக அரசு கடந்த பத்து ஆண்டுகளாக  தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. இந்த ஆட்சிகாலம் முழுக்க  குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோயில்களில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அனைத்து சாதி இந்துக்களுக்கானது என்ற கலைஞரின் திட்டத்தை  ஒரு சாதிக்கானதாக மாற்றினார்கள். இதற்கு புதிய ஆட்சி  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோருகிறோம். இந்து அறநிலைத்துறை அரசை விட்டுப் போனால் ஆர் எஸ் எஸ், பாஜக கட்டுப்பாட்டில் போகும். அப்படிச் சென்றால் ஒருபோதும் நாங்கள் அர்ச்சகர் ஆக முடியாது. எனவே கெட்ட உள்நோக்கத்துடன் கூடிய பாஜகவின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள பெரிய கோயில் பாடல் பெற்ற ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்று பணிநியமனத்திற்காகக் காத்திருக்கும் 203 அர்ச்சக மாணவர்களை உடனே நியமிப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.எனவே சமூக நீதிக்கான புதிய அரசிடம்  கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

Assign students who have completed priestly training to work in temples .. Action demand for Stalin.

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய கோயில்கள் - பாடல் பெற்ற தளங்களில் அர்ச்சகர் பயிற்சி முடித்து, தகுதி திறமையோடு  இருக்கும் 203 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.2. தமிழ்நாட்டில்  மூடப்பட்டுள்ள சைவ , வைணவப் பயிற்சி நிலையங்களை இந்து அறநிலை துறை  மீண்டும் தொடங்க வேண்டும். 3.2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழகஅரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததினை கணக்கில் கொண்டு இந்த வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட வேண்டும். 4.தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலைத்துறையிடம் மட்டுமே இருக்க வேண்டும்.5.தமிழ்நாட்டில் உள்ள  கார்ப்பரேட் சாமியார்களின் சொத்துக்கள்,வருமானங்கள் , நில ஆக்கிரமிப்புகள் குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். 6.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமி ழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். 7. சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios