புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மக்களவை தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் இருப்பதால் மற்ற 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என அற்விக்கப்பட்டு இருந்தது. 

ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 2016 அதிமுகன் சார்பில் ஆர்.சுந்தரராஜன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து களம்  கண்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் சுந்தரராஜனின் வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏ சுந்தரராஜன் டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவியதால் அவரது பதவி பறிப்போனது. இதனையடுத்து ஒட்டப்பிடாரம் தொகுதியும் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை டாக்டர் கிருஷ்ணசாமி திரும்பப் பெற்றுள்ளார். கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. வழக்கு இருந்ததால் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை விலகியுள்ளது.