Asianet Special Today political Hot topic

நேரம் மாலை 4- ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. சூடான இரண்டு சமோசா, ஒரு கப் மசாலா டீயுடன் சேர்த்து கொறித்து சந்தோஷப்பட இதோ ஏஸியா நெட் தமிழின் நியூஸ் பாப்கார்ன்...செம்ம ஜெட் வேகத்தில் வரும் அத்தனையுமே ஹிட்டு மச்சி!

* சசிகலாவை பாதுகாக்க ஜெயாலலிதா தவறிவிட்டார். தனக்காக குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என எல்லாவற்றையும் இழந்தவர் சசிகலா என்பதை அவர் நினைத்திருக்க வேண்டும்.
- சசியின் சகோதரர் திவாகரன்.

* புதிய தொழில்களை துவங்க தமிழகம் மிகச் சிறந்த மாநிலம். தொழில் முனைவோருக்கான எல்லா வசதி வாய்ப்புகளும் இங்கே இருக்கின்றன. 
- தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

* இந்திராகாந்தியால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். இதன் பொருள் என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
- தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின். 

* தமிழக மீனவர்களை யார் சுட்டது என தெரியவில்லை. அந்த குண்டு எங்கிருந்து வந்தது என தெரியவில்லை.
- இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

* இனி பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்காது என்று கூற முடியாது. 
- தி.மு.க. மாஜி அமைச்சர் பொன்முடி. 

* ஜெயாலலிதாவின் கர்ச்சீப்புக்கு கூட உரிமையாளர் நான் தான். எனக்கே அவரது பொருட்களுக்கான உரிமை இருக்கிறது. 
- ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா.

* என்னை மட்டும் ஏன் ஜோக்கர் போல சித்தரிக்கிறீங்க?
- அமைச்சர் செல்லூர் ராஜூ.

* பவானிசாகர் அணையிலிருந்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படிதான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் அவருக்கு பரிசு தருகிறோம்.
- கள் இயக்க தலைவர் நல்லசாமி.

* எல்லா இயக்கங்களை போல் எங்கள் இயக்கத்துக்கும் ஆட்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் லட்சிய பாதையில் இயக்கம் தொடர்ந்து பயணிக்கும். எந்த தலைவரையும் நம்பி இந்த இயக்கம் இல்லை.
- ம.ம.க.வின் ஜவாஹிருல்லாஹ்.

* தமிழ்நாட்டுக்கே துணை முதல்வராக வலம் வருகிறார் பன்னீர்செல்வம். ஆனால் தேனி மாவட்டத்திலேயே கூட்டுக் குடிநீர் திட்டம் கூட இல்லாத ஒரு மோசமான நகராட்சி அவரது சொந்த தொகுதியான போடிதான். 
- தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன்.