Asianet news tamils today sensational breaking

காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு அலையும் வாழ்க்கை நம்முடையது. ஆயிரம் விஷயங்களில் பிஸியாக இருந்தாலும், அரசியலிலும் ஒரு கண் வைத்திருப்பது நம்மவர்களின் இயல்பு. அரசியல் நேயர்களுக்காக இதோ மின்னல் வேக செய்திகள்...

* ஆர்.கே.நகரில் எந்தெந்த போலீஸார் எல்லாம் பணப்பட்டுவாடாவுக்கு துணை நின்றனர் என்ற பட்டியல் கிடைத்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க. ஆட்சி வந்ததும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

- மு.க.ஸ்டாலின் (தி.மு.க. செயல்தலைவர்)

* குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இந்த வெற்றி தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இங்கே பி.ஜே.பி.க்கு வாக்கு வங்கியே கிடையாது. 

- டி.டி.வி. தினகரன்.

* ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்தபோது எங்களால் சில கருத்துக்களை கூற முடியவில்லை. வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவது போன்ற பாலிசிகள் எங்களிடம் உள்ளன. 

- சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)

* ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநில பொதுத்தேர்தல்களில் பி.ஜே.பி. வெல்லாது. 2019 லோக்சபா தேர்தல் மூலம் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும். 

- நாராயணசாமி (புதுவை முதல்வர்)

* நாங்கள் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அதிகப்படியான பணத்தை பட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் வதந்தியை கிளப்புகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. 

- வேணுகோபால் (அ.தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர்)

* மோடியின் சொந்த மண்ணான குஜராத்திலேயே பி.ஜே.பி.யின் செல்வாக்கு குறைய துவங்கிவிட்டது. தம்பட்டம் அடித்துக் கொள்ளுமளவுக்கு ஒன்றும் அவர்கள் குஜராத்தில் வெல்லவில்லை. 

- திருமாவளவன் (தலைவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி)

* குப்பையை ஆற்றின் பள்ளங்களில் கொட்டி, இறக்குமதி மணலால் மூட, வல்லுநர் குழுவை அனுமதிக்க வேண்டும்.

- தா.பாண்டியன் (இ.கம்யூ தேசியக்குழு உறுப்பினர்)

* தினகரனை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் புறக்கணிப்பர். அவர் டெப்பாசீட் இழப்பார். ஜனநாயகத்தை மதிக்கும் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். 

- ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)

* குஜராத் தேர்தலின் முடிவானது பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

- ராகுல் காந்தி (காங்கிரஸ் தலைவர்)

* சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்று சொல்வது போல்தான் இது. 

- அருண் ஜெட்லி (மத்தியமைச்சர்)