Asianet News TamilAsianet News Tamil

ரைசா சொன்ன ரகசியம்! மன்மோகன் சொன்ன மெகா ஜோக்! விஷால் கொடுக்கும் அட்வைஸ்: ஏஸியாநெட் தமிழின் ‘யார் என்ன சொன்னாங்க’ தொகுப்பு.

asia net tamil news
asia net tamil news
Author
First Published Dec 10, 2017, 5:14 AM IST


’முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலே! எக்கடவுளும் நம் மீனவரைக் காப்பாற்றவில்லையே! என்றும் மீனையே உணவாகக் கொண்டீரே...இன்று மீனிற்கே உணவாகிப் போனீரே! அன்று படகுகள் மிதந்த கடல், இன்று அங்கே மிதப்பதோ மீனவர் உடல்! V.I.P-க்கள் மறந்த உங்களுக்கு R.I.P’ 

- என்று கன்னியாகுமரி கடலில் ஓகியால் மூழ்கடிக்கப்பட்ட மீனவர்கள் இறந்து, அவர்களின் உடல் மிதக்கும் குரூரத்தை நண்பர் ஒருவர் கண்ணீர் கவிதையாய் வடித்தெடுத்திருக்கிறார். 

அதை வாசித்தபடியே ஏஸியாநெட் தமிழ் இணையதளம் உங்களுக்காக கொண்டு வரும் ‘யார் என்ன சொன்னாங்க?’ துணுக்குகளை கவனியுங்கள்...

* கவர்னர் ஆய்வுக்கு செல்லும் மாவட்டங்களில் தி.மு.க. அறவழிப் போராட்டங்களை நடத்தும் நிலை உருவாகலாம்.

- தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்

asia net tamil news

* காங்கிரஸ் ஆட்சியின்போது ஊழல் விவகாரங்கள் கடுமையான கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.

- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

asia net tamil news

* பேரிடர் காலத்தில், ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக முதல்வர் பழனிசாமியின் அரசு திகழ்கிறது.

- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

asia net tamil news

* ஒரு சரியான தலைவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அந்த வகையில்தான் நான் செயல்படுகிறேன்.

- மேற்கு வங்க முதல்வர் மம்தா

asia net tamil news

* ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைந்ததன் மூலம் அ.தி.மு.க. முழு வடிவம் பெற்றுவிட்டது. முழு நிலாவாக இருக்கும் அதை பிறை நிலாவாக எண்ணி இன்னமும் பிரச்னை செய்ய வேண்டாம். 

- மாஜி அமைச்சர் வைகை செல்வன். 

* தமிழக கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் ஆய்வு செய்து வருகிறார். இதை தமிழக அரசு கூட விமர்சனம் செய்யவில்லை. ஆனால் ஆட்சிக்கே வரமுடியாத நிலையில் இருக்கும் தி.மு.க. ஏன் விமர்சிக்கிறது?

- பி.ஜே.பி.யின் ராஜ்யசபா எம்.பி. இல.கணேசன்.

asia net tamil news

* பிக்பாஸ் வீட்டில் நான் மொத்தம் 64 நாட்கள் இருந்தேன். 24 மணி நேரத்தை சுருக்கித்தான் காட்டினார்கள். அனைத்தும் நிஜம். அங்கே நான் நானாகவே இருந்தேன்.

- நடிகை ரைசா

asia net tamil news

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியம்தான். ஆனால் அதைவிட மிக முக்கியம் கன்னியாகுமரியில் உள்ள மீனவர்களின் கோரிக்கை. தமிழக அரசு இப்போது அதற்குத்தான் முழு முக்கியம் கொடுக்க வேண்டும். 

- நடிகர் விஷால். 

asia net tamil news

* 2ஜி விஷயத்தில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை. இதுநாள் வரையில் குற்றத்தையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. எனவே 2ஜி தீர்ப்பில் எங்களுக்கு எதிராக என்ன வரப்போகிறது?

-  தி.மு.க. பிரமுகர்  கவிஞர் சல்மா.

asia net tamil news

* ஆளுங்கட்சி கோடி கோடியாய் ஆர்.கே.நகரில் கொண்டு வந்து கொட்டினாலும் வெற்றி என்னமோ தி.மு.க.வுக்குத்தான். 

-  வைகோ.

asia net tamil news

Follow Us:
Download App:
  • android
  • ios