மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அசாம்  முதல்-மந்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் பாஜக முதலமைச்சர் இவராவார் ,  புதிய குடியுரிமைச் சட்டம்,   வங்காளதேசம் ,  பாகிஸ்தான் , ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த  முஸ்லிமல்லாத  சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில்  திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்துக்கள் ,  சீக்கியர்கள் ,  புத்த மதத்தினர் ,  ஜெயின் சமூகத்தினர் ,  பார்சிகள் ,  கிறிஸ்தவர் ஆகியோர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாசித்தாலே அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில் இச்சட்டம் வழிவகை செய்கிறது . 

இக் குடியுரிமை சட்டம் நாட்டிலிருந்து இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும்  வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டம் என்ன கூறி நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது .  இந்நிலையில் வங்கதேச முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இச்சட்டத்துக்கு எதிராக மாநில சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்  அத்துடன் சட்டத்தை ஏற்க மாட்டோம் என பகிரங்கமாக தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .  காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத முதலமைச்சர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் பாஜக ஆட்சிக்கு எதிராக செய்யும் சதியே இப் போராட்டங்கள்  என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் . இந்நிலையில் அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ட்விட் செய்துள்ளார் . இது பாஜவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

இந்நிலையில் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ,  அசாமின்  மைந்தன் என்ற முறையில் நான் எப்போதும் எனது மாநிலத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்கமாட்டேன் ,  இந்த சர்பானந்தா சோனாவால் இந்த சட்டத்தை  ஒருபோதும் அனுமதிக்க மாட்டான்  என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் . முதல்முறையாக இச்சட்டத்தை பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் எதிர்த்துள்ளது இதுவே முதல்முறை,  இது பாஜகவுக்கு  கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  மேலும் தெரிவித்துள்ள அவர்,   அசாம் மக்கள் மீதான அன்பும் அர்ப்பணிப்போம் எனக்கு  என்றும் இருக்கும், அசாம் மக்களின் ஆசிர்வாதத்துடன் நான் இந்த மண்ணிலிருந்த முதல்வர் ஆகி உள்ளேன் ஒருபோதும் மறக்க மாட்டேன் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .