Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவின் சமையல்கார லேடிக்கு குறி: மரண விசாரணை பின்னணியில் திடுக்கிடும் தகவல்..!

இந்த செய்திக்குள் நுழையும் முன் இரண்டு டயலாக்குகளை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 

 

arumugasamy team decided to take enquiry with jayalalithas maid rajammal says political sources
Author
Chennai, First Published Dec 26, 2018, 7:13 PM IST

ஜெயலலிதாவின் சமையல்கார லேடிக்கு குறி: மரண விசாரணை பின்னணியில் திடுக்கிடும் தகவல்..! 

இந்த செய்திக்குள் நுழையும் முன் இரண்டு டயலாக்குகளை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ‘அம்மாவுக்கு ஸ்லோ பாய்சனை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை கொன்றுவிட்டார்கள்!’  -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சில நாட்களுக்கு முன் சொன்னது இது. 

arumugasamy team decided to take enquiry with jayalalithas maid rajammal says political sources

‘அம்மா என்கிட்ட அடிக்கடி வாதம் பண்றதே ‘விரும்பியதை சாப்பிடுறதுதான் எனக்கு சந்தோஷமே. எனக்கு எவ்வளவு சுகர் இருந்தாலும் பரவாயில்லை, சாப்பிடுறதுல ரூல்ஸ் வைக்காதீங்க ப்ளீஸ்.’ன்னுதான்.’ -    இதை சொன்னது இளவரசியின் மருமகனான டாக்டர் சிவகுமார். 

சரி இப்போது விஷயத்துக்குள் நுழைவோம். அதாவது ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் அவரது உணவுப் பழக்க வழக்கங்கள், மருத்துவமனை படுக்கையில் விழுவதற்கு சில நாட்கள் முன்பாக அவரது சாப்பாட்டு முறை ஆகியவை பற்றி அதிக நுணுக்கத்துடன் கண்காணித்தும், அலசியும் வருகிறது. 

arumugasamy team decided to take enquiry with jayalalithas maid rajammal says political sources

காரணம் அதிலிருந்து சில பாயிண்டுகளை பிடித்து, அதன் மூலம் ஜெயலலிதாவின் உடல்நல தீவிர குறைபாடுகளுக்கான காரணங்களை அறிய முடியுமா? என்று முயல்கிறது. இதற்கு ஜெயலலிதாவின் சமையற்கார பெண்ணாக  பல காலமிருந்த ராஜம்மாளின் வாக்குமூலமும், அவருடனான விசாரணைகளும் மிக மிக அவசியம். 

ஜெயலலிதாவின் உடலுக்கு தீங்கு தரும் உணவுப் பொருட்களை சுவையாக சமைத்து வழங்கிட ராஜம்மாள் நிர்பந்திக்கப்பட்டாரா? போன்ற ரீதியிலெல்லாம் விசாரணை தேவைப்படுகிறது. 

arumugasamy team decided to take enquiry with jayalalithas maid rajammal says political sources

இந்நிலையில் ஜெ., மரணத்துக்குப் பின் ராஜம்மாளை ஓ.பன்னீர்செல்வம் தான் ஆதரவு கொடுத்து கவனித்து வருகிறாராம். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில்  ராஜம்மாளை தங்க வைத்து கணிசமான செலவுகளை செய்து கவனித்து வருகிறாராம். 

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்ட முறைகளெல்லாம் இப்போது விசாரணையின் முக்கிய துருப்பாக ஆகி இருக்கும் நிலையில் ராஜம்மாளை தங்கள் தரப்பில் சேர்த்துக் கொள்ள சசிகலாவின் பிரதிநிதியாக டாக்டர் சிவகுமார் போராடுகிறாராம், அதேவேளையில் எடப்பாடியார் தரப்பும் முயலுகிறதாம். இவர்கள் இரண்டு தரப்புகளும் அவரை நெருங்காமல் தடுப்பது  பன்னீர் டீமுக்கு பெரும்பாடாக இருக்கிறதாம். 

பன்னீர் மற்றும் எடப்பாடி இரண்டு தரப்பும் என்னதான்  பார்வைக்கு ஒரே அணியாக இருந்தாலும் கூட, அவர்களுக்கு உள்ளே நடக்கும் யுத்தங்கள் எப்போது வேண்டுமானாலும் பிளவில் போய் முடியும்! எனும் நிலையில், திடீரென இந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரனை வழக்கில் சில முக்கிய மூவ்களை எடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். 

அப்போது ராஜம்மாள் தங்கள் பக்கம் இருந்தால் நல்லது! என்று யோசிக்கிறார்கள் இரு டீமும். ஆக மொதத்தில் மூன்று டீமுமே ஜெயலலிதாவின் சமையர் பெண்மணியான அந்த வயதான ராஜம்மாளை டார்கெட் செய்திருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios