arrest warrant for sudhakaran
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனை ஜுன் 7 ஆம் தேதி சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
ஜெ.ஜெ டிவி க்காக, வெளிநாடுகளில் இருந்து, ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக, அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளது என்றும் , ரிம்சாட் என்ற நிறுவனத்திற்கு, ஜெ.ஜெ., 'டிவி' நிறுவனம் சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அமெரிக்க டாலர் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்றும் , ராமச்சந்திரன், ராஜேஷ் ஆகியோர் வாயிலாக, அப்போசெட் என்ற நிறுவனத்திற்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகை சிங்கப்பூர் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு வழக்கிகள் சசிகலாஇ டி.டி.வி.தினகரன், வி.என்.சுதாகரன் ஆகியோர் மீது சென்னை பொருளதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் தொடர்ந்து ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் குற்றவியல் நிதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து சுதாகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.மேலும் வரும் ஜுன் மாதம் 7 ஆம் தேதி சுதாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
