Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ்- எடப்பாடியை விடவா..? பாஜகவிடம் எடுபடுமா திருமாவளவனின் செல்வாக்கு..?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் எம்.பி நேரில் சந்திக்க உள்ளார்.
 

Arrange to meet Amit Shah
Author
Tamil Nadu, First Published Jul 29, 2019, 11:32 AM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் எம்.பி நேரில் சந்திக்க உள்ளார்.Arrange to meet Amit Shah

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை வலியுறுத்தும் நோக்கில் திருமாவளவன், அமித்ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் உடனிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். எழுவரும் பல ஆண்டுகள் சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. Arrange to meet Amit Shah

எழுவர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம், “ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்” என்று கூறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சரவை, எழுவரையும் விடுதலை செய்யக் கோரி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு பரிந்துரை செய்தது. பரிந்துரை கடிதம் அனுப்பி பல மாதங்கள் கடந்த பின்னரும், அது குறித்து ஆளுநர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தலைமையில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. Arrange to meet Amit Shah

இப்படிப்பட்ட சூழலில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்த உள்ளார் திருமாவளவன். டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கிறார் திருமா. அவருடன் அற்புதம் அம்மாளும் உடனிருப்பார் எனத் தெரிகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகாவது எழுவர் விடுதலை சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios