ஜெயலலிதா கூறிய அந்த வார்த்தை..! கண்ணீருடன் காத்திருக்கும் அற்புதம்மாள்..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த முடிவு தமிழகத்தில் பலத்த வரவேற்பை பெற்றது. அதன்பிறகு முதல்வரை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். அப்போது அவரது கையை பிடித்துக்கொண்டு ஜெயலலிதா,"கவலைப்படாதீங்க. உங்க மகன் சீக்கிரம் வந்துருவார்" என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரிரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 பேர் விடுதலைக்கான நகர்வை சட்டமன்றத்தில் முன்னெடுத்தார்.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 பேர் விடுதலை குறித்து சட்டமன்றத்தில் அறிவித்தார். அதில், "திருவாளர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், திருமதி.நளினி உள்ளிட்ட ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவதாக எனது தலைமையிலான தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இருப்பினும் புலனாய்வு துறையில் வழக்கு விசாரணை இருந்ததால் இம்முடிவு குறித்து உடனடியாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது.
3 நாட்களில் மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை எனில் மாநில அரசுக்கு இருக்கும் குற்றவியல் சட்ட அதிகாரத்தின்படி ஏழுபேரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என இப்பேரவை சார்பாக அறிவிக்கிறேன்" என்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த முடிவு தமிழகத்தில் பலத்த வரவேற்பை பெற்றது. அதன்பிறகு முதல்வரை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். அப்போது அவரது கையை பிடித்துக்கொண்டு ஜெயலலிதா,"கவலைப்படாதீங்க. உங்க மகன் சீக்கிரம் வந்துருவார்" என்றார்.
அதை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நினைவு கூர்ந்த அற்புதம்மாள், ஜெயலலிதா கொடுத்த அந்த நம்பிக்கையில் தான் தனது காலத்தை ஓட்டி வருவதாகவும் இப்போதும் அந்த நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்று கண்ணீருடன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தற்போதைய அதிமுக அரசு 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது வரையிலும் எந்த முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.