‘சர்கார்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது அரசியல் வருகை குறித்து விஜய் லேசாக பஞ்ச் விட்டது, தமிழக அரசியலில் நெருப்பாக பற்றிக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு அரசியல்வாதியாக அவரை தவணைமுறையில் தாளித்து வருகிறார்கள்.

 அவர்கள் வரிசையில், சும்மாவே விஜயை சீண்டும் அர்ஜூன் சம்பத்,  அவர் அரசியல் எண்ட்ரியைப் பற்றிப் பேசினால் விடுவாரா?

. தளபதி தளபதின்றாங்க. நடிகர் விஜய் எந்தப்போர்ல சண்டை போட்ட தளபதின்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. இவர் ஊழலைப்பத்திப்பேசுனா அ.தி.மு.காரங்க கோபிக்கிறாங்க. இவரை ரசிகர்கள் தளபதின்னா தி.மு.க.காரங்க டென்சன் ஆகுறாங்க. இவங்க ரெண்டுபேரையும் சமாளிச்சி அரசியல்ல உருப்படியா கரைசேர விஜய்க்கு இருக்குற ஒரே வழி அவர் ரஜினி கட்சியில சேர்ந்து அவர் பின்னால இருக்குறதுதான்.

மத்தபடி இவரோட யோக்கியதை ஊருக்கெல்லாம் தெரியும். காத்துல ஊழல் பண்றாங்கன்னு படத்துல நடிச்சிட்டு, அதே காத்துல ஊழல் பண்ணுன ‘2ஜி’ கம்பெனிக்குத்தான் இன்னைக்கு ‘சர்கார்’ படம் நடிச்சிக்கிட்டு ஒரு விரலைத் தூக்கி ஊழலை ஒழிப்போம்ங்கிறாரு. இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது?’ என்று கொதிக்கிறார் அர்ஜூன் சம்பத்.

இவ்வளவு நாள் அவர் அரசியல் பேசுனதுக்கும் இந்த ‘சர்கார்’ விழாவுல பேசுனதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அவர் சீக்கிரமே அரசியலுக்கு வரமாதிரிதான் தெரியுது. வரட்டும் பாக்கலாம்.’