Asianet News TamilAsianet News Tamil

துரைமுருகனை காட்டிக் கொடுத்த எட்டப்பன் இவரா..? அதிர்ச்சியில் திமுக..!

வருமானவரித்துறையிடம் போட்டுக் கொடுத்த எட்டப்பன்களை சும்மா விடமாட்டோம் என கர்ஜித்துள்ளார் துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த்.

Are you the one who betrayed Duraimurugan? DMK in shock
Author
Tamil Nadu, First Published Apr 4, 2019, 2:52 PM IST

வருமானவரித்துறையிடம் போட்டுக் கொடுத்த எட்டப்பன்களை சும்மா விடமாட்டோம் என கர்ஜித்துள்ளார் துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த்.Are you the one who betrayed Duraimurugan? DMK in shock

பொதுவாக கூட இருந்தே காட்டிக் கொடுப்பவர்களை மட்டுமே எட்டப்பன் என விளிப்பது வழக்கம். அப்படியானால் கூட இருந்தவர்களே காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை துரைமுருகன் மகன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். நிச்ச்யம் அவர்கள் திமுகவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என பேச்சு எழுந்து வருகிறது. Are you the one who betrayed Duraimurugan? DMK in shock

இந்நிலையில், கூட இருந்தே காட்டிக் கொடுத்த அந்த எட்டப்பன் யார் என்கிற விசாரணையில் இறங்கி இருக்கிறது திமுக நிர்வாகக் குழு. கிட்டத்தட்ட அந்த நபரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் பேச்சுகள் பரவி வருகின்றன. பொருளாளர் பதவிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றம் அடைந்த அந்த முன்னாள் அமைச்சர்தான் வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா தொடர்பான தகவலை பாஜக- அதிமுக கூட்டணிக்கும், தொகுதி பங்கீடு பேச்சு நடத்திய ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவரிடமும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. அப்படியே அந்தத் தகவல் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் ஒருவருக்கு செல்ல அதன்படியே மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியுடன் வருமான வரித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. 

திமுக முன்னாள் அமைச்சர் ஒருவரது மகனுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அவரைப்பற்றியும் துரைமுருகனை காட்டிக் கொடுத்த அந்த முன்னாள் அமைச்சர் மற்றொரு முன்னாள் அமைச்சரின் வாரிசு போட்டியிடும் தொகுதியில் நடக்கவிருந்த பணப் பட்டுவாடா குறித்த தகவலையும் ஆளுங்கட்சிக்கு தெரிவித்துள்ளார். மற்றொரு முன்னாள் அமைச்சர் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை மார்வாடியிடம் விற்று தேர்தலில் செலவளிக்க தயாராக திட்டமிட்டிருந்துள்ளார்.Are you the one who betrayed Duraimurugan? DMK in shock

அந்தச் சொத்தை விற்றதும் பணத்தை எடுத்துச் செல்லும்போது  வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க காத்திருந்துள்ளார். ஆனால் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை கிடுக்குப்பிடி போடுவதால் கடைசி நேரத்தில் சொத்தை வாங்க மார்வாடி மறுத்துள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் வாரிசு வேட்பாளரும் வருமான வரித்துறையினரின் வலையில் சிக்காமல் தப்பியுள்ளார். இந்த விவகாரமும் திமுக தலைமைக்கு தெரிய வந்துள்ளதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

Follow Us:
Download App:
  • android
  • ios