டெல்லி உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர்வதால் உள்ளூர் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகப் பேசிதற்கு  அர்விந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் பேசியபோது, ’’தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் என்பது எனக்குத் தெரியும். மத்திய அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் சேருவதால் எந்த பாதிப்பும் இல்லை. டெல்லி அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் 85 சதவிகித இடம் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தினேன். இதற்காக தமிழக மாணவர்களை உதாரணம் காட்டி பேசியதற்கு மன்னிப்புக் கோருகிறேன்’’ என அவர் தெரிவித்தார். 

டெல்லி உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிகமாக சேருவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிப்புக் கிளம்பியதால், “தமிழக மாணவர்கள் குறித்த என்னுடைய கருத்து மோசமான உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டுள்ளது” என பின் வாங்கினார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரியுள்ளார்.