anwar raja condemns kamal

தமிழகம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாகவும், அதிமுக மீது கமலுக்கு ஆழ்ந்த வெறுப்பு உள்ளதாகவும் அன்வர் ராஜா எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை எனவும் கமலஹாசன் அண்மை காலங்களில் விமர்சித்து வந்தார். 

அதன்படி தற்போது 3 டுவிட்களை பதிவு செய்துள்ளார். அதில், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது எனவும், தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

மேலும், ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஊழலில் இருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் நாம் இன்னும் அடிமைகளே எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அன்வர்ராஜா அதிமுக எம்.பி, அதிமுக ஆட்சி இருக்ககூடாது என கமலுக்கு ஆழமான எண்ணம் உள்ளது எனவும், சினிமாவை போன்று அரசியலும் இருக்கும் என கமலஹாசன் நினைப்பதாகவும் தெரிவித்தார். 

Scroll to load tweet…

அதிமுக மீது அவருக்கு தனிப்பட்ட வெறுப்பு உள்ளதாகவும், தமிழகம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லையென்றால் சரியான விளக்கம் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

ஜெயலலிதா இல்லாத நிலையில் கமலஹாசன் அதிமுகவை பழிவாங்க நினைப்பதாகவும், தனது படம் வெளியாவதில் இருந்த பிரச்சனையை மனதில் வைத்து கொண்டு கமல் இவ்வாறு பேசி வருவதாகவும் தெரிவித்தார்.