Asianet News Tamil

அதிமுக ட்விட்டரை தெறிக்கவிட்ட எதிர்ப்பு கமெண்டுகள்... டாஸ்மாக்கை மூடு..!

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பிரச்சினை இருக்கும் போது இப்போது மதுக்கடைகளை திறக்கக் கூடாது.

Anti comments sparked by AIADMK Twitter ... Close the TASMAC ..!
Author
Tamil Nadu, First Published May 5, 2020, 11:10 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கை ஆகியவற்றையும் தாண்டி தமிழகத்தின் இன்றைய பேசுபொருள் ‘டாஸ்மாக்’திறப்பு. மே 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, சூடு பிடித்திருக்கிறது டாஸ்மாக் தொடர்பான விவாதங்கள்.

சாதாரண நட்களிலேயே கூட்டம் அலைமோதும் இடங்களான டாஸ்மாக் கடைகளை, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய சமயத்தில் திறப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் திறக்கப்படவிருக்கின்றன மதுக்கடைகள். இந்நிலையில் இதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.  இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ‘டாஸ்மாக் கடைகள் 7ம் தேதி முதல் திறக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு பலரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதில், ‘’எடப்பாடியாரின் செயல்கள் மக்களின் நடுவே சற்று நற்பெயரை உண்டாக்கியது அதற்குள் இப்படி செய்வது முட்டாள்தனம்.... இந்த செயலை செய்வது மட்டுமல்லாமல் இதை வெட்கம் இல்லாமல் அதிமுக அதிகார பக்கத்தில் சாதனை புரிந்த மாதிரி வெளியிடுகிறீர்கள்.

 இந்த டாஸ்மாக் மூடியது மூடியாதாக இருக்கட்டும். வரலாறு உங்களை பேசும். இனி வரும் இளைய தலைமுறையை காப்பாத்துங்க. ஐயா என் சகோதரர் மது அருந்திதான் வாகனவிபத்தில் இறந்தான். வயது 21 இப்படி இனியும் நடக்ககூடாது தயவு செய்து மூடுங்கள் ஐயா.

பெரிய தப்பு பண்றீங்க..... அப்புறம் எதுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு? மத்திய அரசுகிட்ட இருந்து வர வேண்டியதை வாங்க முடில... குடிமகன் வைத்திருக்கிற 500 ருபாயையும் புடுங்கனும். அவன் அவன் எப்படி பள்ளிக்கூடத்திற்க்கு பணம் கட்டுவானோ தெரியலை. அன்றாட கூலி தொழிலாளர்களை பற்றி கவலை இல்லை வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றி அரசுக்கு கவலை இல்லை ஆனா டாஸ்மாக் கடை திறக்கப்பட வேண்டும்! இதுதான் அரசின் அணுகுமுறையா?

 

அம்மாவின் அரசு என்று கூறுகிறார்கள் ஆனால் அம்மா என்ன சொன்னாங்க டாஸ்மாக்கை குறைப்போம் என்று சொன்னார்கள் ஆனால் இவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்கள் என்னதான் இந்த அம்மாவின் அரசு அம்மாவின் பேச்சை யார் கேட்கிறது..? அண்டை மாநிலம் அனைத்தும் கடைகளை திறந்து விற்பனை அமோகமாக போய் கொண்டு வருகிறது. அங்கு இருக்கும் கட்சிகள் இதை பெரிது படுத்த வில்லை.  இன்றைய சூழ்நிலையில் மது கடை திறப்பு என்பது அத்தியாவசியம் ஆகி உள்ளது, பெட்ரோல் மற்றும் மது விற்பனையில் மட்டுமே தமிழகத்துக்கு வருமானம் என்பதே நிதர்சனம்

 

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அதிமுகவின் கடைசி ஆட்சி இது 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைவது உறுதி. தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பிரச்சினை இருக்கும் போது இப்போது மதுக்கடைகளை திறக்கக் கூடாது.  மதுவால் மக்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும் அனைத்து குடும்பங்களும் பாதிப்படையும்’’’ என [அபரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios