Asianet News TamilAsianet News Tamil

கோமாவில் இருக்கும் அன்பழகன் பெயரில் அறிக்கையா..? திமுக 2 கோடி கையெழுத்து பெற்றது எப்படி..?

கோமாவில் உயிருக்கு போராட்டி வரும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் பெயரில் வெளியாகி உள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

Anouncement on the name of the anbazhagan in a coma ..? How did DMK sign 2 crore
Author
Tamil Nadu, First Published Feb 28, 2020, 5:42 PM IST

கோமாவில் உயிருக்கு போராட்டி வரும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் பெயரில் வெளியாகி உள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

தி.மு.க., பொதுச் செயலாளர் 97 வயதான க.அன்பழகன், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமாக தி.மு.க.,வின் முக்கியமான அறிக்கைகள் திமுக பொதுச்செயலாளர் என்பதால் அவரது பெயரில் தான் வெளியாகும். ஆனால் தற்போது இரு எம்எல்ஏக்களின் மறைவு காரணமாக நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.,க்களின் கூட்டத்தை ஒத்திவைப்பதாக வெளியான அறிக்கை கூட பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் வருகிறது. Anouncement on the name of the anbazhagan in a coma ..? How did DMK sign 2 crore

இது குறித்து திமுக நிர்வாகி ஒருவர், ’’இது போன்ற முக்கிய அறிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலினோ, மேல் மட்ட தலைவர்களோ வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பத்து நாட்களாக கோமாவில் இருக்கும் ஒருவர் பெயரில் அறிக்கை வெளியாவதற்கும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு நிகழ்விலும் திமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த காலம் கருணாநிதியோடு முடிந்து விட்டது’’ எனத் தெரிவித்துள்ளார். Anouncement on the name of the anbazhagan in a coma ..? How did DMK sign 2 crore

சமீபத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கியது திமுக.  இப்படித்தான் இரண்டுகோடி சொச்சம் பேர் கையெழுத்து போட்டிருப்பார்கள் போல. இன்னும் கூர்ந்து கவனித்தால் நரகத்திலிருந்தும் கூட சிலர் வந்து கையெழுத்து போட்டிருப்பார்கள்'’ என எதிர்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios