Asianet News TamilAsianet News Tamil

அடிச்சார் பாரு ஆர்டரு... இதைத்தானய்யா எதிர்பார்த்து காத்திருந்தாங்க... அமைச்சர் துரைமுகன் வெளியிட்ட அறிவிப்பு!

1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது, கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

Announcement issued by Minister Duraimugan!
Author
Tamil Nadu, First Published Sep 9, 2021, 1:23 PM IST

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழில் செய்பவர்கள் இனி சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் மண் எடுக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில், அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ‘’நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் என சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30ல் வெளியிடப்பட்டது.

Announcement issued by Minister Duraimugan!

தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் மண் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்காக தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி, 1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது, கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

Announcement issued by Minister Duraimugan!

ஆகையால், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்’’என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios