சீமான் எங்க போட்டியிட்டாலும் தோக்க தானே போறாரு... போற போக்கில் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன? ராமநாதபுரத்தை பொறுத்தவரை இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ஒன்றாக உள்ளது.

Annamalai responded to CM Stalin accusation tvk

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணிநேரத்தில் வெளியிடப்படும் என முதல்வரின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். 

கோவை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை;- மத்திய அரசு முக்கியமான முடிவை அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துள்ளார்கள். எல்பிஜி சிலிண்டர் விலை நேரடியாக 200 ரூபாய் குறிக்கப்படும். இது 33 கோடி குடும்பங்களுக்கும் அமல்படுத்தப்படும். இது அனைத்து மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.  200 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்துவிடும். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சிலிண்டர் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு கடந்த நான்கு ஐந்து மாதங்களாக வழங்கப்பட்டு வந்த 200 ரூபாய், மேலும் ஒரு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. 37 லட்சம் குடும்பத்தினர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க;- திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆச்சு! சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்குற சொன்னீங்களே என்னவானது?அண்ணாமலை

Annamalai responded to CM Stalin accusation tvk

உலகில் ரஷ்யா உக்கரை போருக்கு பிறகு Natural gas, LPG கேஸ் விலை 200 சதவிகிதம் எல்லாம் ஏறிய போதிலும் கூட, மத்திய அரசு அதனை  பெரிய அளவில் ஏறவிடாமல் பார்த்துக் கொண்டார்கள், இருப்பினும் அது சாமானிய மக்களுக்கு சுமையாக இருந்தது.  இதனை மக்களும் பலமுறை தெரிவித்து வந்தனர் மத்திய அரசு இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அவருக்கு நம் பிரதமர் எப்படி கடந்த தீபாவளியன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களோ அதே போல் இந்த ரக்‌ஷா பந்தன், ஓணம் திருநாளில் கேஸ் விலையை குறைத்துள்ளார்கள். மேலும் வருகின்ற காலங்களில் கேஸ் விலையை மேலும் குறைப்பதற்கு தற்பொழுது உள்ள சப்ளையர்களை தாண்டி வேறு நாட்டில் இருந்து வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். 

Annamalai responded to CM Stalin accusation tvk

என் மண் என மக்கள் முதல் கட்ட பாதயாத்திரையை பொறுத்தவரை மிகவும் கடுமையாக இருந்தது. குறிப்பாக தென் தமிழகத்தில் 40°க்கும் மேல் அனல் பறக்கக்கூடிய இடங்களில் நடைபெற்றது. அதே சமயம் மக்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது,  அதுமட்டுமின்றி மக்களும் கலந்து கொண்டது எல்லாம் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் அதிகமான பிரச்சனைகளும் தென்தமிழகத்தில் உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு தண்ணீர் பிரச்சனை விவசாய வளர்ச்சி ஆகியவை எல்லாம் தென் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ளது. அதனால் தான் தென் தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் பொழுதும் அங்குள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப மத்திய அமைச்சர்களை அழைத்து வந்தோம். 

பாதயாத்திரை செல்லும் பொழுது அனைவரும் பிரதமர் நன்றாக செயல்படுகிறார். ஆனால் சிலிண்டர் விலையை மற்றும் குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள். நானும் அவர்களிடம் பிரதமர் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தேன். தென்காசியில் செப்டம்பர் 4ம்தேதி இரண்டாம் கட்ட பாதயாத்திரை துவங்கி 19ஆம் தேதி கோவைக்கு வந்து விடுவோம், இங்கேயும் பல்வேறு மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறோம். தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணிநேரத்தில் வெளியிடப்படும். முதலமைச்சர் பேசுவதில் அதிகமாக பொய் உள்ளது. முதலமைச்சர் எதைப் பேசுவதற்கு முன்பும் ஒரு முறை கிராஸ் செக் செய்ய வேண்டும் அல்லது உடன் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த பேச்சை கேட்டு செய்ய வேண்டும். ஒரு அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் சிக்க போகிறார்.  திமுக வந்த பிறகு பொய் அதிகமாக பேச துவங்கி விட்டார்கள். ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.

இதையும் படிங்க;-  கொடநாடு என்றாலே பழனிசாமிக்கு ‘கொல நடுக்கம்’ ஏற்படுவது ஏன்.? அனைத்தும் சட்டப்படி விரைவில் நடக்கும்-முரசொலி

Annamalai responded to CM Stalin accusation tvk

நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு ஒரு பவர் மாநில அரசுக்கு ஒரு பவர் என்றுதான் உள்ளது. ஆனால் இங்கு ஒரு மாநில அரசு தன்னிச்சையாக தண்ணீர் வழங்க மாட்டேன் என்று கூறும் பொழுது அது அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி தான். கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் புதிதானவர்கள் அல்ல. காவிரி நீர் பிரச்சினையைப் பொறுத்தவரை இவர்கள் ஏதோ சிறு பிள்ளைகள் வந்து அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன் காவிரி நீர் மேலாண்மையை மதிக்க மாட்டேன் என்று சொல்வது போல் உள்ளது. 

Annamalai responded to CM Stalin accusation tvk

சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன? ராமநாதபுரத்தை பொறுத்தவரை இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ஒன்றாக உள்ளது. அதே போல தான் விருதுநகரும் உள்ளது. எனவே பிரதமருங்க நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள்.  திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே,  பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios