எனக்கு எதிராக டுவிட் போடும் பெண் நிர்வாகி..! துபாய் சென்றது ஏன்..? யாரை சந்தித்தார்..? ஆதாரம் உள்ளது- அண்ணாமலை
திமுகவினர் வீட்டு கல்யாணத்துக்கு போகக்கூடாது, மீறி போனால் அவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை என பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவினருடன் தொடர்பு கூடாது
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார் அப்போது பல்வேறு ஆலோசனைகளையும் எச்சரிக்கையும் நிர்வாகிகளுக்கு அண்ணாமலை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவினர் தீவிரமாக உழைக்க வேண்டும். 25 தொகுதிகளை இலக்காக வைத்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜகவின் மாவட்ட தலைவர்கள் ஆங்காங்கே திமுகவினருடன் நெருக்கமாக உள்ளனர். திமுகவினர் குடும்ப விழாவிற்கு பாஜகவினர் குடும்பத்தோடு வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்வதாக தகவல் வருகிறது. திமுகவினர் தான் நமக்கு எப்போதும் பிரதான எதிரி அதனால் யாரும் அவர்களோடு தொடர்பு வைத்திருக்கக் கூடாது. திமுக காரங்க வீட்டு விசேஷங்களுக்கு போகக்கூடாது மீறினால் அவர்கள் கட்சியில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்தார்.
துபாய்க்கு சென்றது ஏன்.?
பாஜகவினர் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அப்ரூவல் கேட்டு திமுகவினரிடம் செல்வதாக தகவல் வந்துள்ளது. தொழில் தான் முக்கியம் என்றால் அப்படிப்பட்டவர்கள் கட்சிக்கு தேவையில்லை என தெரிவித்தார். எனவே இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டால் மாவட்ட தலைவர்கள் எந்த நேரமும் மாற்றப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் டுவிட் போடும் பெண்மணி ஒருவர் துபாய்க்கு எதற்காக போனார்.? எங்கு தங்கினார்? எந்த திமுக காரரை சந்தித்தார் என்பதையெல்லாம் எனக்கு தெரியும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அண்ணாமலை கூட்டத்தில் பேசியதாக கூறினார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து ஆறு சீட்டு களுக்காக யாரிடம் துவங்கியிருக்க வேண்டிய நிலை இல்லை அவர்கள் கொடுக்கும் தொகுதியில் போட்டியிட்டு ஒன்று இரண்டு சீட்டுகள் பெறுவதே விரும்பவில்லை என இதை பிரதமரிடமும் நான் தெரிவித்துவிட்டதாக தெரிவித்தார்.
மேயர் பிரியா வாகனத்தில் தொங்கியதை கூட விட்டுடலாம்.. ஆனால்.. ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் பாஜக..!
தனித்து போட்டியிட திட்டம்
தமிழகத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிட பிரதமரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், எனவே தனித்து போட்டிடும் அளவுக்கு நாம் வளர்ந்தாக வேண்டும் என தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியில் ரவுடி ஒருவரை சேர்க்க பரிந்துரை வந்தது நான் யோசித்து சொல்வதாக கூறியிருந்தேன் ஆனால் அதையும் மீறி கட்சியில் சேர்த்து விட்டார்கள். அந்ந நபர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்