அனில் அம்பானியால் ஒரு பேப்பர் ஃபிளைட் கூட தயாரிக்க முடியாது !! கிழித்து தொங்கவிட்ட ராகுல் காந்தி !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 12, Mar 2019, 11:29 PM IST
anil ambani vs raful gandhi
Highlights

தொழிலதிபர் அனில் அம்பானியால் ரஃபேல் போர் விமானம் அல்ல, ஒரு பேப்பர் விமானத்தைக் கூட தயாரிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு தேவையான ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்க அனில் அம்பானியின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவற்காக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், பிரதமர் மோடி தனது நண்பர் அனில் அம்பானிககு ரூ.30 ஆயிரம் கோடி விமானப்படையின் பணத்தை எடுத்து கொடுத்துள்ளதாகவும் ராகுல் காந்தி  தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் காங்கிரஸ் கட்சியின் செயல் குழு  கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.


 
பிரதமர் மோடி விமான படையின் பாக்கெட்டிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடி திருடி அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார்  பிரதமர் மோடி. ரஃபேல் ஒப்பந்தத்தில், ஆப்செட் ஒப்பந்தராகியிருக்கும் அனில் அம்பானியால் காகித விமானம் கூட தயாரிக்க முடியாது என்று செமையாக கிண்டல் செய்துள்ளார்.

loader