Asianet News TamilAsianet News Tamil

மனைவியின் சொந்த தொகுதியில் மாஸ் காட்டிய அன்புமணி... உதயநிதியை ஓரம் கட்ட வேண்டுகோள்..!

அதிமுக என்றால் மக்கள் ஆட்சி என்றும் திமுக என்றால் மன்னர் ஆட்சி என்று சென்னை சேப்பாக்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani who showed Mass in his wife's own constituency ... request to sideline Udayanidhi
Author
Tamil Nadu, First Published Mar 21, 2021, 3:32 PM IST

அதிமுக என்றால் மக்கள் ஆட்சி என்றும் திமுக என்றால் மன்னர் ஆட்சி என்று சென்னை சேப்பாக்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.Anbumani who showed Mass in his wife's own constituency ... request to sideline Udayanidhi

சென்னை, சேப்பாக்கத்தில் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸாலி ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  “இந்த தொகுதியின் மருமகன் நான் என்று சொல்லிக்கொள்ளலாம். என் மனைவி இங்கேதான் பிறந்தார், வளர்ந்தார், படித்தார்கள். அவளது வீடு இங்குதான் இருக்கிறது. நமது வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸாலி ஆதரவளிக்க வேண்டும். உதயநிதிக்கும் இந்த தொகுதிக்கும் சமந்தமே இல்லை.Anbumani who showed Mass in his wife's own constituency ... request to sideline Udayanidhi

உதயநிதியின் தாத்தா இத்தொகுதியில் நின்றதால் உதயநிதியும் இத்தொகுதியில் நிற்பேன் என்கிறார். திமுக ஒரு கட்சி கிடையாது அது ஒரு குடும்பம். திமுகவிற்காக உழைத்தவர்கள் அந்த கட்சியில் அதிகம் பேர் உள்ளனர். ஆனால், அவர்களை திமுக ஓரம்கட்டிவிட்டது. ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே திமுகவின் முக்கிய அங்கமாக இருக்க முடியும். அதிமுக என்றால் மக்கள் ஆட்சி. திமுக என்றால் மன்னர் ஆட்சி. ஏன் என்றால் இங்கே ஒரு விவசாயி முதல்வராக வரலாம். இனியொரு விவசாயி துணை முதல்வராக வரலாம். ஆனால், திமுகவில் மன்னர் ஆட்சி இருப்பதால் வாரிசு அரசியல்தான் சாத்தியம்” எனப் பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios