Asianet News TamilAsianet News Tamil

அன்புமணியை டாக்டராக்கி, காடுவெட்டி குருவை அடியாளாக்கிய ராமதாஸ்.. கனலரசனுக்கு வகுப்பெடுத்த பேரா.சுந்தரவல்லி.

காடுவெட்டி குருவின் மகன் பேசுவது சிரிப்பாக இருக்கிறது,  காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பிறகு அவரது சகோதரி, அதாவது கனலரசனின் அத்தை வெளியில் வந்து மீடியாக்கள் முன்னிலையில் கதறினார். அதற்கான வீடியோ இப்போதும் என்னிடத்தில் உள்ளது. அவர் என்ன கதறினார்? ராமதாஸ் எங்களை வாழவே விடவில்லை, மருத்துவர் ராமதாஸ் எங்களை அடிக்கிறார்,

Anbumani was made a doctor but Kaduvetti Guru was made a gang leader by Ramadas.sundaravalli advice kanalarasan.
Author
Chennai, First Published Nov 29, 2021, 6:57 PM IST

அன்புமணியை டாக்டர் ஆக்கிவிட்டு காடுவெட்டி குருவை அடியாளாக பயன்படுத்திய மருத்துவர் ராமதாசை குறித்து உன் அத்தையிடம் கேட்டுப்பார் என காடுவெட்டி குரு மகன் கனல் அரசனுக்கு பேராசிரியை சுந்தரவள்ளி வலியுறுத்தியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் அவருக்கு ஆதரவாக பேசுபவர்களை மிரட்டும் வகையில்  காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பேசி வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் சுந்தரவல்லி இவ்வாறு கூறியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Anbumani was made a doctor but Kaduvetti Guru was made a gang leader by Ramadas.sundaravalli advice kanalarasan.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. அதேபோல் நடிகர் சூர்யவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல், அந்த குறிப்பிட்ட விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பாமகவினர் அதில் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. இந்த விவகாரத்தில் காடு வெட்டி குருவின் மகனும் மாவீரன் மஞ்சல் படை என்ற அமைப்பின் தலைவருமான கனலரசன், நடிகர் சூர்யாவை கடுமையாக எச்சரித்து வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில் 5 போலீஸ் நடிகர் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது என்றும், ஒழுங்காக சூர்யா மன்னிப்பு கேட்கவேண்டும் குறிப்பாக ஞானவேல் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால், பிறகு வந்து கையில்லை தலையில்லை என்று யாரும் தங்களிடம் வந்து நிறுக கூடாது என அவர் மிரட்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் அது மிகுந்த பேசுபொருளானது. பலரும் அந்த பேச்சை கண்டித்திருந்தனர். இந்நிலையில் பேராசிரியை சுந்தரவல்லி காடு வெட்டி குரு மகன் கனலரசனுக்கு அறிவுரை வழங்குவது போல பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

Anbumani was made a doctor but Kaduvetti Guru was made a gang leader by Ramadas.sundaravalli advice kanalarasan.

காடுவெட்டி குருவின் மகன் பேசுவது சிரிப்பாக இருக்கிறது,  காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பிறகு அவரது சகோதரி, அதாவது கனலரசனின் அத்தை வெளியில் வந்து மீடியாக்கள் முன்னிலையில் கதறினார். அதற்கான வீடியோ இப்போதும் என்னிடத்தில் உள்ளது. அவர் என்ன கதறினார்? ராமதாஸ் எங்களை வாழவே விடவில்லை, மருத்துவர் ராமதாஸ் எங்களை அடிக்கிறார், எங்களைக் கொல்ல முயற்சி செய்கிறார், எங்கள் அண்ணன் குருவை கொன்றது அவர்தான் என்று கதறினார். மேடையில் ஏறி மாவீரன் காடுவெட்டி குரு என்று அவர்கள் காடுவெட்டி குருவை ஒரு அடியாளாக பயன்படுத்தினார்கள். மற்றவர்களை அடியாளாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய மகனை டாக்டராக வேண்டும், முதல்வராக்க வேண்டும் என்றும் ராமதாஸ் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மேலும் பேசிய காடுவெட்டி குருவின் சகோதரி என் அண்ணனை கொன்றது ராமதாஸ்தான் என பகிரங்கமாக கூறினார். எங்களைக் காப்பாற்றுங்கள் என ஊடகத்தின் முன்னாள் கதறியது யார் என்பதை கனலரசன் நினைத்துப் பார்க்க வேண்டும். 

Anbumani was made a doctor but Kaduvetti Guru was made a gang leader by Ramadas.sundaravalli advice kanalarasan.

அங்கள் அத்தை கதறியபோது உங்களுக்கு ஆதரவாக எந்த வன்னியர் சங்கம் வந்தது? இன்றைக்கு கை போகும், கால் போகுமென்று நீ வெட்கமில்லாமல் பேசுகிறாய், உன் வீட்டிற்குள் அவர்கள் நுழைந்தபோது எத்தனை கை போனது? எத்தனை கால் போனது? அன்றைக்கும் உங்களுக்கு ஆதரவாக அவர்களை நாங்கள்தான் கண்டித்தோம். உங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நாட்கள்தான் குரல் கொடுத்தோம். ஆனால் இப்போது உனக்கு சாதி வெறியா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios