சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒருவாரத்தில் வர உள்ள நிலையில் பதவி ஏற்பை தள்ளி வையுங்கள் என கவர்னருக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஜெயலலிதா தனக்கு இக்கட்டான நேரம் வந்த போதெல்லாம் ஓ.பன்னீர் செலவத்தை தான் அந்த இடத்தில் அமர்த்தினார்.அந்த அளவுக்கு அவர் பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை வைத்தார், சட்டமன்ற தேர்தலில் கூட ஜெயலலிதா எண்ணப்படித்தாம் பலர் தேர்தலில் நின்றனர்.

அப்போது கூட அவர் சசிகலாவை தேர்வு செய்யவில்லை. இன்று குறுக்கு வழியில் முதல்வராக வர துடிக்கிறார் , சட்டபடி அது சரியாக இருக்கலாம். ஆனால் கட்சிக்காரர்கள் , தொண்டர்கள் ஏற்றுகொள்ளவில்லை. எனக்கு பல அதிமுக கட்சியினர் நண்பர்களாக இருக்கின்றனர் .

ஒருவர் கூட இவரை ஏற்றுகொள்ளவில்லை. மக்களை விடுங்கள் அவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். ஆனால் கட்சித்தொண்டர்கள் ஒருவர் கூட ஏற்றுகொள்ளவில்லை. அதிமுகவில் 200 பேர் மட்டுமே சசிகலாவை ஆதரிக்கின்றனர். அவர்கள் அதிமுக எம்பிக்கள் , எம்.எல்.ஏக்கள் மட்டுமே.இதை இருண்ட காலமாக பார்க்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு ஒரு வாரத்தில் வர உள்ளது என்று நீதிபதி பினாகி கோஷ் தெரிவித்துள்ளார் ஆகவே சொத்துகுவிப்பு தீர்ப்பு ஒரு வாரத்தில் வர உள்ள நிலை இன்னும் ஒருவாரம் பொறுத்து தீர்ப்பு வந்த பிறகு முதல்வர் பதவி ஏற்பது பற்றி பரிசீலியுங்கள் என்று கவர்னரை கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
