Asianet News TamilAsianet News Tamil

அதுஒரு 38 , இது 22 அப்பப்பா... நாங்க அபாரமா ஜெயிப்போம்... இன்னும் 2 வருஷத்துக்கு எடப்பாடி தான் முதலமைச்சர்!! முட்டுக்கொடுக்கும் அன்புமணி

மத்தியில் மீண்டும் மோடி தான் பிரதமரானார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என அன்புமணி கூறியுள்ளார்.

anbumani support admk and edappadi palanisamy
Author
Chennai, First Published May 21, 2019, 12:03 PM IST

மத்தியில் மீண்டும் மோடி தான் பிரதமரானார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என அன்புமணி கூறியுள்ளார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட  அன்புமணி இந்த வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார். 

அப்போதே செய்தியாளர்களை சந்தித்த அவர்;  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்கு காரணம் காட்டவே மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுகவினர் புகார் அளித்தனர். இந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக வாக்காளர்களோ, வாக்குச்சாவடி முகவர்களோ, தேர்தல் பிரிவு அதிகாரிகளோ புகார் அளிக்கவில்லை. ஆனால் இங்கு தேவையற்ற மறுஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. 

anbumani support admk and edappadi palanisamy

இந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பாமகவிற்கு முழுமையாக ஓட்டளித்து இருப்பதால், ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் மறுஓட்டுப்பதிவு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக. வேட்பாளருக்கு அரசியல் தெரியாது அவரை மக்கள் ஏற்கவில்லை.

பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்த நாளில் இருந்து எங்களை தரக்குறைவாக ஸ்டாலின் பேசினார். முதலில் ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று கூறிய அவர், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றபோது தேர்தல் முடிந்த பின்னர் பிரதமரை முடிவு செய்வோம் என்றார். பின்னர் மீண்டும் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று கூறினார்.

இந்தநிலையில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சந்தித்தபோது அவரிடம் 1 மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பிஜேபியுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தோல்வி பயம் வந்து விட்டதால் அவர் குழப்பத்தில் இருக்கிறார். முதலமைச்சராக வேண்டும் என்ற அவருடைய கனவு எப்போதும் நிறைவேறப்போவது இல்லை.

anbumani support admk and edappadi palanisamy

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமகவும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவும் அமோக வெற்றி பெறும். இதேபோல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பிஜேபி ஆட்சி அமையும். தமிழகத்தில் அதிமுக.ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios