anbumani ramadoss condemns about edappadi government
அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகள் வெளியான பிறகும் இந்த பினாமி அரசு நீடிக்க வேண்டுமா? என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள சசிகலா - எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி செய்த முறைகேடுகள் குறித்து பாமக ஏற்கனவே முன்வைத்த குற்றச்சாட்டுகள் தற்போது ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எம்எல்ஏக்களுக்கு லஞ்சம், கொடுக்கப்பட்டதை அக்கட்சியின் உறுப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார் அன்புமணி தெரிவித்துள்ளார்..
.png)
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனிடம் நடத்தப்பட்ட உரையாடலில்,‘‘சசிகலா அணியில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ரூ.6 கோடி தருவதாகக் கூறினர்.
அடுத்த நாள் பணம் தட்டுப்பாடு காரணமாக ரூ.2 கோடி பணமும், மீதத்திற்கு தங்கமும் தருவதாக உறுதியளித்தனர். அப்போதே அதைக் கொடுத்திருந்தால் நான் உட்பட யாருமே ஓபிஎஸ் அணிக்கு சென்றிருக்க மாட்டோம். ஓபிஎஸ் அணியில் சில உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1 கோடி கொடுத்துள்ளனர் என சரவணன் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சில உதிரிக் கட்சி உறுப்பினர்களுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமாக தரப்பட்டது’’ என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு உறுப்பினருக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என்றால் சசிகலா அணியில் இருந்த 122 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம்.732 கோடி ரூபாய் வினியோகிக்கப் பட்டிருக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அமைப்புகளான சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, உளவுத்துறை ஆகியவற்றுக்கும், தமிழகக் காவல்துறைக்கும் தெரியாமல் எம்எல்ஏக்களுக்கு பணம் விநியோகம் செய்திருக்க முடியாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இவ்வளவு கேவலமாக நடத்து கொள்ளும் இந்த பினாமி ஆட்சி தமிழகத்திற்கு தேவையா? என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
