நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயிச்சிருந்த பரவாயில்ல, மொத்தமா வாஷ் அவுட் தான உங்களுக்கு எதுக்கு அந்த பதவியை கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது என அதிமுக நினைக்கிறதாம் ஆனால் அன்புமணியோ எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கு விவரம் பத்தாது எப்படியாவது ஏமாத்திடலாம்னு பிளான் போட்டுள்ளாராம். 

அதிமுக பிஜேபியின் இந்த மெகா கூட்டணியில் அதிமுக சார்பில் ஒரே ஒரு வெற்றியாக தேனி தொகுதி மட்டுமே ஜெயித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பேரம் பேசி கூட்டணி சேர்ந்த தேமுதிகவாகட்டும், வட மாவட்டங்களில் பலமான வாக்கு வங்கி இருக்கு என சொல்லி 7 தொகுதிகளை வாங்கி மொத்தமாக வாஷ் அவுட் ஆகியுள்ளது.

இதெல்லாம் விட கொடுமை என்னனா? கடந்த முறை பிஜேபி தேமுதிக கூட்டணியில் ஜெயலலிதாவின் பேகா வியூகத்தையும் மீறி வென்ற அதே அன்புமணி இந்தமுறை, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டார். செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அன்புமணி 5 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக, பாமக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் தேர்தல் கூட்டணி அமைத்தபோது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு கொடுக்குமா? என குழப்பமாகவே உள்ளது.

இப்போது, ஒரு மாநிலங்களவைத் தொகுதி. இப்போது அன்புமணியே தோல்வியடைந்துவிட்டதால் அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அன்புமணிக்கே கேட்டு வாங்குவது என்று அன்புமணி பிளான் போட்டுள்ளாராம்.

ஆனால், கூட்டணி வெற்றி அடைஞ்சா மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கமுடியும். ஒட்டுமொத்தமா வாஷ் அவுட் ஆன  உங்களுக்கு எதுக்கு ராஜ் சபா சீட் கொடுக்கணும்? அதை அதிமுகவுக்கே வச்சுக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால், அன்புமணியோ முகத்தில் படு தோல்வியடைந்ததை முகஸ்த்தில் கட்டிக்கொள்ளாமல் செம்ம கூலாக கூட்டணி ஒப்பந்தத்தின்போது அதிமுக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தபடி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்குத் தரணும், அப்படி இல்லன்னா, அமித் ஷாவிடம்  பேசி அதை எப்படி வாங்குவது என எனக்கு நல்லாவே தெரியும் என சொல்கிறாராம். அதுமட்டுமா? நீங்க ராஜ் சபா சீட் கொடுத்தா அடுத்த வர்ற சட்டசபை தேர்தலுக்கு இப்போதே ஒப்பந்தம் போட்டு அந்த ராஜ் சபா சீட் வாங்கும் முயற்சியில் உள்ளாராம் அன்புமணி.