Asianet News TamilAsianet News Tamil

அன்புமணி போன்ற தலைவரை காட்டுங்கள் பார்க்கலாம்... ராமதாஸ் ஆத்திரம்..!

முதுமை என்னை எவ்வளவு தான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
 

Anbumani cannot be prevented from becoming the chief minister
Author
Tamil Nadu, First Published Jul 26, 2019, 11:29 AM IST

முதுமை என்னை எவ்வளவு தான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.Anbumani cannot be prevented from becoming the chief minister

மருத்துவர் ராமதாசின் 80-வது பிறந்த நாள் விழாவான முத்துவிழா திருவேற்காட்டில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ’’எனது 80-வது பிறந்தநாள் விழாவை பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து நடத்தலாம் என்று அன்புமணியும், ஜி.கே. மணியும் திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் என் மீது தனிப்பட்ட பாசம் வைத்திருப்பவர்கள். அழைத்தால் வந்திருப்பார்கள்.

நான் தான் என்னோடு போராடிய, சிறை சென்ற பாட்டாளிகளோடு இணைந்து விழா கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதைத் தொடர்ந்து தான் இந்த விழா பாட்டாளிகளோடு நடைபெறுகிறது. அவர்கள் என் மீது காட்டும் பாசத்தை நான் மறையும் வரை மறக்கமாட்டேன்.

Anbumani cannot be prevented from becoming the chief minister

1980-ம் ஆண்டு முதல் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் மொழிக்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஆனால், தமிழ்மக்கள் ஏனோ இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை. அன்புமணி போன்ற தலைவரை காட்டுங்களென்று வெளிப்படையாகவே கூறிவிட்டேன். ஆனால், அது மறைக்கப்படுகிறது. இந்த சூழ்ச்சிகள் எத்தனை நாள் பலிக்கும்?

மகாபாரதத்தில் சகுனி வெற்றிபெற்றானா? எத்தனை சகுனிகள் சூழ்ச்சி செய்தாலும் எதிர்காலம் பா.ம.கவுக்குத்தான். நிச்சயம் அன்புமணி மாற்றத்தை ஏற்படுத்துவார். அதற்காக பா.ம.க.,வினர் அனைவரும் உழைக்க வேண்டும். முதுமை என்னை எவ்வளவு தான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன் என்று இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். இதுவே எனது முத்துவிழா செய்தி.Anbumani cannot be prevented from becoming the chief minister

பா.ம.க.,வின் இலக்கை அடைய 1 கோடி இளைஞர்களை சந்தியுங்கள். பா.ம.க.வின் வரலாற்றை அவர்களிடம் சொல்லுங்கள் அவர்களை அன்புமணியின் பின்னால் திரளச்செய்யுங்கள்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios