மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்திற்குப் பிறகு பொய்யான பரப்புரைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். 

குடியுரிமை சட்டத் திருத்தம் (சிஏஏ), என்பிஆர் பற்றி தேவையற்ற, பொய்யான தகவல்களைக் கூறி மக்களை அச்சுறுத்தும் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டங்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினர் தொடர்ந்து போராடிவருகிறார்கள். என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தமிழகத்திலும் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்தச் சட்டங்கள் குறித்து திமுக பொய்த் தகவல்களைப் பரப்புவதாக அதிமுக குற்றம்சாட்டிவருகிறது.