அது கொரிய வெர்ஷன் என கிருத்திகா கூறியிருப்பதை சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகி மாரியம்மாளுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.  

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் சென்னை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

யூடியூபில் ஆபாசமான பேச்சுக்களை பேசி, வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தார்கள். தொடர்ந்து மதனின் மனைவியும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பப்ஜி மதன் மீது ஜூலை மாதம் 6ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அறிவுரைக்கழகத்தில் மதன் ஆஜராகியிருக்கிறார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் உள்ள இந்த அறிவுரைக்கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்பு மதன் ஆஜராகி, அவர்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி குண்டர் சட்டம் செல்லாது, தன்மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது என அவர் தரப்பு வாதிடலாம். இதன் தொடர்ச்சியாக விசாரணை அதிகாரி ஆஜராகி பப்ஜி மதன் மீது எதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பார். அதன் பின்னரே இந்த வழக்கில் மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது சரியா? அல்லது ரத்து செய்யவேண்டுமா? என்பது தொடர்பான முடிவை ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்கொள்வார்கள். 

அப்போது வாதாடிய மதனின் மனைவி கிருத்திகா, ‘’பப்ஜி மதன் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை. சீன செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷனை தான் விளையாடி பதிவேற்றினோம்” என வாதம் செய்தார். ஏற்கெனவே மதன் பயன்படுத்திய ஆடம்பரக்கார்களை, சாதாரண கார்கள் தான் என வாதிட்டதை சமூக ஊடகங்கள் விமர்சித்தன. இந்நிலையில் பப்ஜி மதன் விளையாடியது தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு இல்லை. அது கொரிய வெர்ஷன் என கிருத்திகா கூறியிருப்பதை சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகி மாரியம்மாளுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.