அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோன பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் அக்கட்சி தொண்டர்கள் முதல் டிடிவி தினகரன் வரைக்கும் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா கடந்த 3 தினங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெற்றிவேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் சில நாட்களுக்கு முன் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமமுக நிர்வாகி வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு மற்றும் இதய நோயுடன் கோவிட் தொற்றும் இருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
திமுக அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் வரை கொரோனா தொற்று அப்பியது. அதில் இருந்து பலர் மீண்டாலும் சில எம்எல்ஏக்கள் மரணம் தமிழகத்தை அலறச்செய்திருக்கிறது.