Asianet News TamilAsianet News Tamil

பார்லிமெண்ட் தேர்தலில் தனித்துப் போட்டி… எங்க சப்போர்ட் இல்லாம யாரும் பிரதமர் ஆக முடியாது !! அதகளம் பண்ணும் தினகரன் !!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்த் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  தனித்துப் போட்டியிடும் என்றும் நாங்கள் கைகாட்டுபவர்கள்தான் பிரதமர் ஆக முடியும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தில்லாக தெரிவித்துள்ளார்.

ammk no allaince with any party
Author
Kanyakumari, First Published Dec 24, 2018, 8:17 AM IST

டி.டி.வி. தினகரனை பொறுத்தவரை எதையுமே தில்லாக செய்யக் கூடியவர். எத்தனையோ நெருக்கடிகள், பின்னடைவுகள், தோல்விகளை சந்தித்தாலும் எதற்கும் அசராமல் போராட்ட குணத்துடன் செயல்பட்டு வருபவர். அதிமுகவுடன் இணைய பாஜக எவ்வளவோ நெருக்கடி கொடுத்தாலும், தனித்து நின்ற ஜெயிப்பேன் என தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளவர் தினகரனன்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று தினகரன் கூறியிருந்தார்.  திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வந்தால் அவர்களுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் கூறியிருந்தார். இதற்காக அவர் திருநாவுக்கரசருடன் ரகசியமாக பேச்சவார்த்தை நடத்தி வந்தார்.

மேலும்  மக்கள் நீதி மய்யம் நடத்திய காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி, தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், மூன்று கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

ammk no allaince with any party

ஆனால் தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், தினகரனால் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று தினகரன் உறுதியாகக் கூறிவிட்டார். திமுகவுடன் தோழமையிலுள்ள கட்சிகளைத் தவிர, மீதமுள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.

ammk no allaince with any party

இந்நிலையில் கன்னியாகுமரியில்  செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மெகா கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்து காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தார்.

தமிழக மக்களின் நலனுக்காக 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். அவருடைய வழியிலேயே தொண்டர்களாகிய நாங்கள் போட்டியிடுவோம். தேர்தல் முடிவில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது நமக்குத் தெரியும். எனவே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தினகரன் உறுதியுடன் தெரிவித்தார்.

ammk no allaince with any party

தொடர்ந்து பேசிய அவர் , ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை உறுப்பினரான நான் வெற்றிபெற்றதால், ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த திட்டங்களைக் கூட அங்கு நிறைவேற்றாமல் வைத்துள்ளனர். அடிப்படை வசதிகள் செய்வதைக் கூட இந்த அரசாங்கம் தடுத்துவைத்துள்ளது என தினகரன் குற்றம் சாட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios