Asianet News TamilAsianet News Tamil

அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !! அதிரி புதிரி பண்ணிய தினகரன் !!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 24 மக்களவை மற்றும் 9 சட்டப் பேரவை இடைத் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார். இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AMMK candidate list published
Author
Chennai, First Published Mar 17, 2019, 8:40 AM IST

17 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி 40 மக்களவைத் தொகுதிக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதே போல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

AMMK candidate list published

இதனிடையே டி.டி.வி. தினகரனின் அமமுக இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அந்த கட்சியுடன் எஸ்டிபிஐ கட்சி மட்டும் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமமுக கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி,டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.  அதில் 24 மக்களவை தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

AMMK candidate list published

இதில் திருச்சி தொகுதியில் சாருபாலா தொண்டைமான், பெரம்பலூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளில், ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்கள் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலுக்கன வேட்பாளர்கள் பட்டியல்

1.    திருவள்ளூர்-  பொன்.ராஜா 
2.    தென் சென்னை  . - இசக்கி சுப்பையா

3.    ஸ்ரீபெரும்பதூர் - ஜி தாம்பரம் நாராயணன்
4.    காஞ்சிபுரம் - முனுசாமி
5.    விழுப்புரம்- வானூர் என் கணபதி
6.    நாமக்கல்- பிபி சாமிநாதன்
7.    ஈரோடு -கேசி செந்தில் குமார்
8.    சேலம்  - செல்வம் 9.    கரூர் -என் தங்கவேல்
10.    திருச்சி -சாருபாலா தொண்டைமான்
11.    பெரம்பலூர்- எம். ராஜசேஎக்ரன்
12.    சிதம்பரம்- ஏ.இளவரசன்
13.    மயிலாடுதுறை- எஸ் செந்தமிழன
14.    நாகப்பட்டினம்- செங்கொடி
15.    தஞ்சாவூர் -முருகேசன் 
16.    சிவகங்கை-தேர்போகி வி பாண்டி
17.    மதுரை- டேவிட் அண்ணாதுரை
18.    ராமநாதபுரம்- ஆனந்த் 
19.    தென்காசி  -ஏஎஸ் பொன்னுதாய்
20.    திருநெல்வேலி- ஞான அருள் மணி
21.    நீலகிரி -எம். ராமசாமி
22.    திருப்பூர்-செல்வம்,
23.    கோவை - அப்பாதுரை
24.    பொள்ளாச்சி - முத்துக்குமார்

AMMK candidate list published

அதேபோல்  நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

AMMK candidate list published

1.    பூவிருந்தவல்லி - ஏழுமலை, 
2.    பெரம்பூர் - வெற்றிவேல், 
3.    திருப்போரூர் - கோதண்டபாணி 
4.    குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்,
5.    ஆம்பூர் - பாலசுப்பிரமணி, 
6.    அரூர் - முருகன்,
7.    மானாமதுரை - மாரியப்பன் கென்னடி, 
8.    சாத்தூர் - சுப்பிரமணியன், 
9.    பரமக்குடி - முத்தையா 

இதைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios