amitsha refused that he didnt call rajini to bjp

8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்து தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அரசியலில் குதிப்பது குறித்து அவர் சூசமாக தனது முடிவைத் தெரிவித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசப் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக எழுந்துள்ள நிலையில், ரஜினி பா.ஜ.க.வுக்கு வரவேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் வெளிப்படையாகவே அழைப்புவிடுத்தனர். 

இந்தச் சூழலில் நடிகர் ரஜினி பா.ஜ.க.வுக்கு வர வேண்டும் என்று தாம் கூறவில்லை என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்பேன் என்று மட்டுமே தாம் கூறியதாகவும், அரசியலுக்கு வருவதா? இல்லையா என்பது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமித்ஷா அண்மையில் அளித்த பேட்டியில், ரஜினி அரசியலுக்கு வந்தால், பா.ஜ.க.வின் கதவி திறந்தே இருக்கும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.