சிதம்பரத்தை காம்பவுன்ட சுவர் எகிறி குதித்து, உள்ளே புகுந்து சிபிஐ தூக்கிய நிலையில் பீதியின் பிடியில் இருக்கின்றனர் முக்கிய புள்ளிகள் சிலர், அதிலும் தமிழகத்தில் முக்கிய பழைய தலையான வீரமணி மீது ஐடியின் கண் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  கடுப்பான குருமூர்த்தி, அமித்ஷாவுக்கு பல தகவல்களை சொன்னதாக சொல்கிறார்கள். வீரமணி மீது நடக்கப்போகும்  ஐ.டி ரெய்டுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் அளவுக்கு பிஜேபி மீது விமர்சனம் அடுக்கியதன் விளைவே காரணமாக சொல்லப்படுகிறது. 

அதாவது, கடந்த  13-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் திருக்குறள் மாநாடு என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை நடத்தினார் கி.வீரமணி. இதில் வைகோ, திருமாவளவன், சத்யராஜ், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி போன்ற முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் பிஜேபி மீது மிக மிக கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்றனர். இந்த தேசமே பிஜேபியை ஆதரித்தாலும், எந்தக் கால கட்டத்திலும் தமிழகத்தில் அக்கட்சியை காலூன்ற விடவே கூடாது என்று மொத்தமாக சபதம் போட்டுப் பேசியிருக்கின்றனர். இந்த சபதம் போட்டதில் வீரமணி இல்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததென்னவோ வீரமணிதான். 

அதனால், இந்த நிகழ்ச்சியின் ரெய்டு ஆப்பை ஒலி மற்றும் ஒளி கேசட்டை வடிவில் அப்படியே டெல்லிக்கு பார்சல் செய்திருக்கிறது உளவுத்துறை. உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆபீசர் அதை மிக மொத்தமாக பார்த்துவிட்டு அமைச்சர் அமித்ஷாவிடம் சில தகவல்களை பாய்ண்ட் எடுத்து ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கிறார்கள். விளைவு, அது அவருக்கடுத்த அதிகார லாபிகளுக்குள் ஒரு ரவுண்டு வந்துள்ளது. முதலில் ஓகே சொன்னது துக்ளக் குருமூர்த்தி தான், அதன் பிறகு வருமான வரித்துறை மிக முழுமையாக அலர்ட் செய்யப்பட்டுள்ளது! என்கிறார்கள் முக்கிய நபர்கள். 

கி.வீரமணி பெரியார் கொள்கைகளையும், நாத்திக தத்துவங்களையும் ஊருக்குதான் உபதேசம் செய்வார், ஆனால் தனது சொந்த வாழ்விலும், குடும்ப உறவுகள் மத்தியிலும் எந்த தங்கு தடையையும் போதிக்க மாட்டார்! என்று எப்போதுமே ஒரு விமர்சனம் உண்டு. இதை திரை கிழித்து, வெளிச்சம் போட்டுக் காட்டும் பொருட்டே கி.வீரமணி மீதான ஐடி ரெய்டு நடவடிக்கை இருக்கும் என சொல்கிறார்கள்.

ஐ.டி.க்கும், அரசியலுக்கும் என்ன லிங்க்? என்று கேட்டால்....அழுக்கு லுங்கிகளும், தேய்ந்த கைத்தடியையும் வைத்துக் கொண்டுதான் பெரியார் காலத்தைக் கழித்தார், அனால் பாருங்க  பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல 1000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது திகவிலுள்ள பலருக்கும் தெரியாத ரகசியம். இதை நிர்வகிக்கும் அதிகாரத்தை தன் மகனுக்கு கி.வீரமணி எழுதிக் கொடுத்தபோது திராவிடர் கழகத்தில் பஞ்சாயத்து மானாவாரியா வெடித்தது. நிர்வாக முறைகேடுகள் தொடர்பான பல புகார்கள் ஐடி துறைக்கு ரகசியமாக கிடைத்திருக்கிறது. அவை இப்போ முழுக்க தூசி தட்டி எடுத்து தயாராக வைத்துள்ளார்களாம். அந்த சொத்துக்களின் வளர்ச்சி, அது பயன்படுத்தப்பட்ட முறை, அச்சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகார வரம்பு, அவற்றுக்கு உரிய வரி செழுத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அலசப்பட்டுள்ளது.

இதில் அறக்கட்டளை நிர்வாகத்துக்கு எதிராக கத்தை கத்தையா ஆவணங்கள் கிடைத்துள்ளன. எனவே கூடிய விரைவில் பெரியார், மணியம்மை அறக்கட்டளை வளாகத்தினுள் ஐ.டி.துறையினரின் கார்களை சீக்கிரமே நுழைவதை பார்க்கலாம் என சொல்கிறது தமிழக பிஜேபி தரப்பு. இது போக மிக செல்வச் செழிப்பாக செட்டிலாகி இருக்கிற கிறித்துவ அமைப்புகளின் முக்கிய புள்ளிகள் சிலரையும்  ஐ.டி டார்க்கெட் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

தன்னை சுற்றி கட்டப்படும் இந்த ரெய்டு பரபரப்பு பின்னல்களைப் பற்றி கி.வீரமணி தரப்பு ஸ்மெல் செய்து, உடனே ஸ்டாலினிடம் சொல்ல,  ‘கணக்கு வழக்குகள்  சரியா இருந்தா யாரும் தேவையே இல்ல என வீரமணிக்கு ஷாக் கொடுத்துள்ளாராம், அதையும் மீறி அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதாவது இருந்தால் பார்த்துக்கொள்ளலாம் என சைலண்ட்டாக தலையாட்டினாராம்.