நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து  நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

இந்த பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் மோடியை அடுத்து அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று வருகிறார். 

மோடியை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் அமைச்சராக பதவியேற்றார். அதனையடுத்து பாஜக  தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

அவரையடுத்து நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பஸ்வான் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறுவோர் பதவியேற்று வருகிறார்கள்.

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அவருடன் அமித்ஷா அமைச்சராக பணியாற்றிய பிறகு தற்போது மோடி அமைச்சரவையில் அமித்ஷா மீண்டும் மத்திய அமைச்சராக இடம் பிடித்துள்ளார். அமித்ஷாவுக்கு நிதித்துறை வழங்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.