Asianet News TamilAsianet News Tamil

அவரோட நிலைமை உங்களுக்கும் வேண்டாம்... அரசியலுக்கு வராதீங்க... ரஜினிக்கு அமிதாப் பச்சன் அட்வைஸ்..!

23 ஆண்டுகளாக அப்போ வருகிறார், இப்போ வருகிறார் என ரஜினி காந்த் 2020ல் கட்சியை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருஅந்த வேளையில் அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என அவரது திரையுலக நண்பர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். 

Amitabh Bachchan Advice to Rajinikanth
Author
Tamil Nadu, First Published Oct 4, 2019, 12:23 PM IST

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை தொடர்ந்து, அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Amitabh Bachchan Advice to Rajinikanth

இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசும்போது, சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். அதை அவர் கேட்கவில்லை. இதே அறிவுரையை ரஜினிகாந்திடமும் கூறியிருக்கிறேன்’எனத் தெரிவித்துள்ளார்.  அமிதாப் பச்சனும் ரஜினியும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவரது பேச்சை கேட்டு ரஜினி அரசியலில் இறங்காமல் இருப்பாரா? களம் காண்பாரா? என்பது தெரியவில்லை. Amitabh Bachchan Advice to Rajinikanth

ஏற்கெனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ரஜினியையும், கமலையும் அரசியலுக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். '’அரசியல் என்பது இப்போது பணத்தை மையப்படுத்தியதாக மாறியுள்ளது. நல்லது செய்ய அரசியலில் நுழைந்தாலும், இப்போது நம்மால் அதைச் செய்ய முடியாது. எனது நம்பர் 1 இடத்தை விட்டுவிட்டு நான் அரசியலில் நுழைந்தேன். ஆனால் எனது சொந்தத் தொகுதியிலேயே, என்னைத் தோற்கடிக்க கோடிக்கணக்கில் செலவிட்டார்கள், அதேபோல் தான் என் சகோதரர் பவனுக்கும் நடக்கிறது.

கமல் இந்த முறை வெல்வார் என்று நான் நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், பொறுமையுடன் இழப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொள்ளலாம், ஆனால் என்னைப் போன்ற சென்சிடிவ் தன்மை கொண்டவர்களால் அரசியலில் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் என்னைப் போல் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்களிடம் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் அரசியலில் இருக்க வேண்டாம். ஏனெனில் அது மதிப்புக்குரியது அல்ல.

Amitabh Bachchan Advice to Rajinikanth

இருப்பினும் தோல்விகளை மீறி நல்லது செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தால், அரசியலுக்கு வாருங்கள், ஒரு நாள் விஷயங்கள் மாறக்கூடும்” என அறிவுறுத்தி இருந்தார். இதுபோல இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் கேட்டுக் கொண்டுள்ளதால் நண்பனின் பேச்சை கேட்டு நடுத்தெருவில் விட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். 

Follow Us:
Download App:
  • android
  • ios