அரசு பள்ளிகளில்  படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து பணம் கட்ட முடியவில்லை என்றால் அரசே ஏற்கும் என முதலவர் அறிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய விஷயம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சிதம்பரம் நடராஜர் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில். இந்தக் கோயிலில் வழிபட்டால் அமைதி நிலவும் என்பதால் நான் சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அதிமுக ஆண்டவன் கட்சி. அமித் ஷா எங்களுடைய நண்பர். அவர் அதிமுகவிற்கு நல்லதுதான் செய்வார். 

நான் ரஜினி அரசியலுக்கு வருவார் என கூறவில்லை. வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றுதான் கூறினேன். அரசு பள்ளிகளில்  படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து பணம் கட்ட முடியவில்லை என்றால் அரசே ஏற்கும் என முதலவர் அறிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய விஷயம்.

நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை முதல்வர் பார்த்து பார்த்து செய்கிறார். மேலும், விரைவில் அதிமுக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்வார்கள். எங்களது தேர்தல் பிரச்சாரம் எழுச்சியுடன் இருக்கும்'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.