Asianet News TamilAsianet News Tamil

சும்மா விட்டுடக்கூடாது... அமித் ஷா அதிரடி உத்தரவு... தி.மு.க.வுக்கு ஷாக்..!

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக பாஜக நிர்வாகிகளை அழைத்து பல்வேறு நிகழ்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். 
 

Amit Shah ordered to investigate the weaker DMK
Author
Tamil Nadu, First Published Aug 12, 2019, 2:06 PM IST

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக பாஜக நிர்வாகிகளை அழைத்து பல்வேறு நிகழ்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

 Amit Shah ordered to investigate the weaker DMK

வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து கவனமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் உணர்வுகள், தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக இருக்கும் சவால்களை கேட்டுள்ளார். Amit Shah ordered to investigate the weaker DMK

முக்கியமாக வேலூர் தொகுதி தேர்தல் முடிவு பற்றி அதிகமாக விவாதித்துள்ளனர். மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் வென்றது. பெரும்பாலான தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இப்போது வேலூர் தொகுதியில் தி.மு.க போராடியே வெற்றி பெற்றுள்ளது.

முக்கியமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.கவுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் அ.தி.மு.க- பா.ஜக கூட்டணிக்கு 4 லட்சத்துக்கு மேல் வாக்குகள் கிடைத்து இருக்கிறதே, புதிய வாக்கு வங்கி உருவாகி இருப்பதை காட்டுகிறதா? என்று அமித்ஷா கேட்டுள்ளார்.

Amit Shah ordered to investigate the weaker DMK

மக்களின் இந்த மன மாற்றத்துக்கு காரணம் என்ன? முத்தலாக், காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் மனநிலை என்ன? அது தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது பற்றி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு கிடைத்துள்ளன என்பது பற்றி விரிவாக ஆய்வு நடத்துங்கள்’ என உத்தரவிட்டு உள்ளாராம்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios