Asianet News TamilAsianet News Tamil

அமமுகவை காரணம் காட்டும் அமித்ஷா... எடப்பாடியாருக்கு இப்படியொரு சோதனையா..?

அ.ம.மு.க.,வினரால் தென் மாவட்டங்களில் நம் கூட்டணியோட வெற்றி பாதிக்கும் என, உளவுத் துறை அறிக்கை தந்திருக்கு. அதனால, அ.ம.மு.க.,வையும் கூட்டணியில் சேர்த்துப்போம்

Amit sha showing the reason for Ammk ... Is this a test for Edappadiyar ..?
Author
Tamil Nadu, First Published Feb 26, 2021, 11:25 AM IST

கடந்த  ஜனவரி மாதம் எடப்பாடிபழனிசாமி டெல்லி சென்றார். பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது நடந்த விஷயம்தான் இப்போது ஹாட் டாபிக்.  அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம், ‘’எனக்கு ஒரு தகவல் வந்திருக்கு. அ.ம.மு.க.,வினரால் தென் மாவட்டங்களில் நம் கூட்டணியோட வெற்றி பாதிக்கும் என, உளவுத் துறை அறிக்கை தந்திருக்கு. அதனால, அ.ம.மு.க.,வையும் கூட்டணியில் சேர்த்துப்போம்' என அமித் ஷா கூறி இருக்கிறார்.Amit sha showing the reason for Ammk ... Is this a test for Edappadiyar ..?

இதை முன்பே எதிர்பார்த்திருந்த் எடப்பாடி பழனிசாமி, ‘’அ.ம.மு.க., நிர்வாகிகள் எல்லாம், எங்கள் பக்கம் வந்து விட்டனர். எந்த வழியிலும், நம்முடைய வெற்றி வாய்ப்பு பாதிக்காது. நீங்கள் சொன்ன தென் மாவட்டங்களில் மட்டுமே, நாம் 78 தொகுதிகளில் ஜெயித்து விடுவோம்' என்றாராம். இப்படி பதில் வரும் என அமித் ஷாவும் காத்திருந்தார்.Amit sha showing the reason for Ammk ... Is this a test for Edappadiyar ..?

'சூப்பர், தென் மாவட்டங்கள்ல உங்களுக்கு அவ்ளோ செல்வாக்கு இருக்கு. ரொம்ப சந்தோஷம். நீங்க அங்கே நிறைய இடத்துல போட்டி போடுங்க. எங்க கட்சிக்கு கொங்கு மண்டலத்துல அதிகமான சீட் கொடுத்துடுங்க. அது போதும்' என்றாராம், அமித் ஷா. அப்போதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு புரிந்துள்ளது. இப்போது, பா.ஜ.க., கேட்கும், 40 சீட்களில், 30 கொங்கு மண்டலத்தில் மட்டும் சீட்டுக்களை கேட்கிறார்கள். இதனால் செம்ம காண்டாகி கிடக்கிறது அதிமுக தலைமை.

Follow Us:
Download App:
  • android
  • ios